சுதந்திர தினத்தன்று மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய 7 இடங்கள் இவையே..!
இந்த 2024 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று நீங்கள் டெல்லிக்கு அருகில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஏழு இடங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்த ஆண்டு சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வியாழன் கிழமை அன்று வருகிறது எனவே இந்நாளில் நம்முடைய நாட்டின் தலைநகரமான டெல்லியில் இருந்து சில மணி நேர பயணத்தில் அமைந்துள்ள இந்த 7 வரலாற்று சிறப்புமிக்க இடங்களை மிஸ் பண்ணாமல் பாருங்கள்..
பாலா குயிலா : இது டெல்லியில் இருந்து சுமார் 152 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது ராஜஸ்தானின் அல்வாரியில் உள்ள கம்பீரமான கோட்டையாகும். இந்த கோட்டை 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோட்டையில் இருந்து நகரத்தின் கண்களா காட்சிகளை நம்மால் பார்க்க முடியும்.
ஃபதேபூர் சிக்ரி : இது டெல்லியில் இருந்து சுமார் 223 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. உலக பாரம்பரிய தளம் கைவிடப்பட்ட இந்த முகலாய நகரம் அக்பரின் கட்டிடக்கலை பாரம்பரியத்திற்கு சான்றாகும்.
ஷீல் மஹால் : இது டெல்லியில் இருந்து 50 கிலோ மீட்டர் மட்டுமே உள்ளது. உத்திர பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் உள்ள ஒரு அழகான அரண்மனை ஆகும். இந்த அரண்மனை முழுவதும் அழகிய கண்ணாடி அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஆம்பர் கோட்டை : இந்த கோட்டை டெல்லியில் இருந்து சுமார் 252 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அற்புதமான கோட்டை ஆகும். இந்த கோட்டை ஆனது அதன் கட்டிடக்கலை மற்றும் யானை சவாரிக்கு பெயர் பெற்றது.
நிம்ரானா கோட்டை : இந்தக் கோட்டையானது டெல்லியில் இருந்து சுமார் 123.9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 15 ஆம் நூற்றாண்டில் இந்த கோட்டை கட்டப்பட்டது. இந்த கோட்டை தற்போது பாரம்பரிய ஹோட்டலாக மாறியுள்ளது. இது ராஜஸ்தானின் அரச மகத்துவத்தை காட்டுகிறது.
நரேந்திர நகர் : இந்த நகரம் டெல்லியில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு அழகிய நகரம் ஆகும். இது கம்பீரமான அரண்மனைகளுக்கு பெயர் பெற்றது.
பாங்கர் கோட்டை : இந்த கோட்டை டெல்லியில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ராஜஸ்தானில் இருக்கும் ஒரு பேய் கோட்டை என்றே சொல்லலாம். இந்த கோட்டை ஆனது அதன் அமானுஷ்யமான கதைகள் மற்றும் கட்டிடக்கலைக்கு மிகவும் பெயர் பெற்றது.