டாப் 10.. புத்திசாலி என்ற அர்த்தத்தில் இருக்கும் ஆண் குழந்தைகளுக்கான பெயர்கள்!
Intelligent Baby Boy Names : புத்திசாலித்தனமான குழந்தையை பெறுவது ஒவ்வொரு பெற்றோரின் கனவு. அந்த வகையில், உங்கள் ஆண் குழந்தைக்கு புத்திசாலி என்று பொருள்படும், புதிய மற்றும் நவீன பெயரை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்கான பதிவு தான் இது.
அவ்யன் : அவ்யன் என்பது சமஸ்கிருதத்தில் புத்திசாலித்தனத்தில் சரியானவர் என்று அர்த்தம். மேலும் இது நவ நாகரிக பெயர் என்பதால், இந்த பெயரை உங்கள் ஆண் பிள்ளைக்கு வைப்பது சிறந்த தேர்வாகும்.
கிரிடே : இந்த தனித்துவமான மற்றும் ஸ்டைலான பெயரானது, சமஸ்கிருதத்தில் இரக்கமும், ஞானமும் கொண்டவர் என்று அர்த்தம். இந்தப் பெயர் பச்சாபாதம் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றின் குணங்களை ஒருங்கிணைக்கிறது இந்த பெயரையும் உங்கள் ஆண் பிள்ளைக்கு வைக்கலாம்.
ரியான்ஷ் : ரியான்ஷ் என்பது ஒளியின் கதிர் அல்லது விஷ்ணுவின் ஒரு பகுதி என்றும் அர்த்தம். புத்திசாலி என்று நேரடியாக இந்த பெயர் இருக்கவில்லை என்றாலும், இது பெரும்பாலும் அறிவாளி மற்றும் பிரகாசமான மனதுடன் தொடர்புடையது என்பதால் இந்த பெயரையும் வைக்கலாம்.
வீரராஜ் : வீரராஜ் என்பது ராஜா அல்லது புத்திசாலி என்று அர்த்தம். அதாவது ஒரு புத்திசாலி மட்டும் தைரியமாக தலைவரை இது குறிக்கிறது என்பதால் இது உங்கள் ஆண் குழந்தைக்கு வைப்பதற்கு சிறந்த பெயராகும்.
இவன் : இவன் என்பது கடவுளின் கருணை மற்றும் ஞானமான பரிசு என்று அர்த்தம். நீங்கள் உங்கள் ஆண் பிள்ளைக்கு ஸ்டைலாக பெயர் வைக்க விரும்பினால் இந்த பெயர் சிறந்த தேர்வாகும்.
இதையும் படிங்க: உங்கள் குழந்தைக்கு பெயர் வைக்கும் முன் இவற்றை நினைவில் வையுங்கள்.. தவறுதலாக கூட இந்த தவறுகளை செய்யாதீங்க...!!
ஜாவியன் : ஜாவியன் என்பது பிரகாசமான அல்லது புத்திசாலி என்று அர்த்தம். நீங்கள் உங்கள் ஆண் குழந்தைக்கு நவீன கால பெயர் வைக்க விரும்பினால் இந்த பெயர் வையுங்கள்.
இதையும் படிங்க: அம்மாக்களே கவனிங்க..! மழைக்காலத்தில் பிறந்த குழந்தையை பராமரிக்க சில டிப்ஸ் இதோ!!
ஈஷான் : ஈஷா என்பது சூரியன் அல்லது புத்திசாலித்தனம் என்று அர்த்தம். உங்கள் பிள்ளைகள் புத்திசாலி என்று அர்த்தத்தில் பெயர் வைக்க விரும்பினால் இந்த பெயர் சிறந்த தேர்வாகும்.
நியோன் : நியோன் என்பது புத்திசாலித்தனம், பிரகாசமான மனம் மற்றும் புதுமையான சிந்தனையாளர் என்று அர்த்தம்.
ஐயான் : ஐயான் என்பது அரபு வம்சவாளியை சேர்ந்த சமகால பெயராகும். பிரகாசமான அல்லது புத்திசாலி என்று இதன் அர்த்தம். இது ஒரு ஸ்டைலான பெயர் என்பதால் உங்கள் குழந்தைக்கு இதை நீங்கள் வைக்கலாம்.
ரியான் : ரியான் என்பது புத்திசாலித்தனமான ஆட்சியாளர் என்று அர்த்தம். எனவே, இது உங்கள் குழந்தைக்கு வைக்க வேண்டிய ஒரு ஸ்டைலான பெயராகும்.