- Home
- டெக்னாலஜி
- சாதனங்கள்
- சியோமி, பிலிப்ஸ், டைசன்: 10 நிமிடத்தில் காற்றை சுத்தமாக்கும் 5 ஏர் பியூரிஃபையர்கள்!
சியோமி, பிலிப்ஸ், டைசன்: 10 நிமிடத்தில் காற்றை சுத்தமாக்கும் 5 ஏர் பியூரிஃபையர்கள்!
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசை சமாளிக்க வீடுகளுக்கு ஏற்ற சிறந்த 5 ஏர் பியூரிஃபையர்களின் முக்கிய அம்சங்கள், பில்டர் ரகங்கள், சுத்திகரிப்பு திறன் மற்றும் விலை விவரங்களை பற்றி பார்ப்போம்.

சிறந்த ஏர் பியூரிஃபையர் மாடல்கள்
இந்தியாவில், குறிப்பாக மாசு அளவுகள் அதிகமாக உள்ள முக்கிய நகரங்களில் வாழ்பவர்களுக்கு ஏர் பியூரிஃபையர் (Air Purifier) என்பது மிகவும் தேவையான ஒரு வீட்டு உபயோகப் பொருளாக மாறியுள்ளது. உங்கள் வீட்டின் சூழல், ஆரோக்கிய தேவைகள் மற்றும் உட்புற காற்று மாசின் அளவுக்கு ஏற்ப சரியான பியூரிஃபையரைத் தேர்ந்தெடுப்பது சிறந்த முதலீடாகும்.
டைசன் (Dyson), பிலிப்ஸ் (Philips), சியோமி (Xiaomi) போன்ற முன்னணி நிறுவனங்கள் பல்வேறு விலை வரம்புகளில் சிறந்த ஏர் பியூரிஃபையர் மாடல்களை வழங்கி வருகின்றன. வடிகட்டுதல் அம்சங்கள் (Filtration), காற்றின் வேகம் (Airflow), சத்தம், எளிதாக எடுத்துச் செல்லும் வசதி மற்றும் பில்டர் மாற்றும் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த 5 ஏர் பியூரிஃபையர்களின் பட்டியல் மற்றும் அவற்றின் விவரங்களை பற்றி பார்போம்.
Dyson Purifier Cool PC2 De-Nox
பிரீமியம் ரக ஏர் பியூரிஃபையரைத் தேடுபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.
வடிகட்டுதல் தொழில்நுட்பம் - இதில் HEPA H13 தரத்திலான 3-அடுக்கு வடிகட்டுதல் அமைப்பு உள்ளது. K-Carbon பில்டர் மூலம் 50% கூடுதல் நைட்ரஜன் டை ஆக்சைடை (NO2) உறிஞ்சுவதுடன், 99.95% மிக நுண்ணிய மாசுகளையும் தூசிகளையும் அகற்றும்.
முக்கிய அம்சங்கள் - 'Air Multiplier' தொழில்நுட்பம் மூலம் வினாடிக்கு 290 லிட்டருக்கும் அதிகமான காற்றை வெளியேற்றும். 350-டிகிரி சுழலும் வசதி (Oscillation), LCD திரை மற்றும் MyDyson ஆப் மூலம் காற்றின் தரத்தை உடனுக்குடன் (Live metrics) அறியலாம்.
எடை & மோடுகள் - 4.9 கிலோ எடை கொண்ட இதில் 10 வேகக் கட்டுப்பாடுகள், ஆட்டோ மோட் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவு உள்ளன.
விலை - ரூ. 54,900
Mijia Smart Air Purifier 6
பெரிய அறைகள் மற்றும் நவீன ஸ்மார்ட் வசதிகளை விரும்புவோருக்கு இது ஏற்றது.
பாதுகாப்பு & பரப்பு - 940 சதுர அடி வரை பரப்பளவு கொண்ட அறைகளுக்கு இது ஏற்றது. இதன் CADR (Clean Air Delivery Rate) மணிக்கு 443 கன மீட்டர் ஆகும்.
சென்சார்கள் - வெப்பநிலை, ஈரப்பதம், தூசி, PM1 மற்றும் PM2.5 அளவுகளைக் கண்காணிக்க 5 ஸ்மார்ட் சென்சார்கள் உள்ளன. அலர்ஜி இல்லாததற்கான (Allergen-free) சான்றிதழும் பெற்றுள்ளது.
ஸ்மார்ட் வசதிகள் - Xiaomi Home, Xiaomi HyperOS Connect, Google Home மற்றும் Alexa ஆகிய ஆப்ஷன்களுடன் இணைக்கலாம். 40W மின் நுகர்வு கொண்ட இதில் அமைதியான 'ஸ்லீப் மோட்' உள்ளது.
விலை - ரூ. 17,999.
Praan Hive Indoor Air Purifier
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் மெடிக்கல்-கிரேட் பில்டர் வசதி கொண்ட மாடல் இது.
வடிகட்டுதல் திறன் - மருத்துவத் தரத்திலான HEPA H14 பில்டரைக் கொண்டுள்ள 0.015 மைக்ரான் அளவுள்ள நுண்ணிய அசுத்தங்கள் மற்றும் அலர்ஜிகளை 99.99% வரை சுத்திகரிக்கும்.
டிசைன் & பரப்பு - விண்வெளி தரத்திலான அலுமினியம் (Aerospace-grade aluminium) உடலமைப்புடன் 'ஸ்பேஸ் கிரே' ஃபினிஷில் உருவாக்கப்பட்டுள்ளது. 350 சதுர அடி பரப்பளவு வரை பாதுகாப்பு அளிக்கும்.
சென்சார்கள் - PM2.5, VOCs, கார்பன் டை ஆக்சைடு, வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் சுற்றுப்புற சத்தத்தை அளவிடும் ரியல்-டைம் சென்சார்கள் உள்ளன. இதன் தகவல்களை OLED திரை மற்றும் மொபைல் ஆப்பில் பார்க்கலாம்.
எடை & விலை - இதன் எடை 15 கிலோ. இதனுடைய விலை ரூ. 64,512.
Wozoyo Pure Air PA1
குறைந்த பட்ஜெட்டில் சிறிய அறைகளுக்கு ஏற்ற சிறந்த ஏர் பியூரிஃபையர்.
வடிகட்டுதல் வசதி - ஆபீஸ் அறைகள் மற்றும் சிறிய படுக்கையறைகளுக்கு ஏற்றது. ப்ரீ-பில்டர், ஆன்டி-பாக்டீரியல் அடுக்கு, H13 HEPA பில்டர் மற்றும் ஆக்டிவேட்டட் கார்பன் பில்டர் அடங்கிய 4-அடுக்கு சுத்திகரிப்பு அமைப்பைக் கொண்டுள்ளது.
செயல்திறன் - PM2.5, PM10, புகை, தூசி மற்றும் செல்லப்பிராணிகளின் பொடுகு போன்றவற்றை 99.99% நீக்கும். 404 சதுர அடி பரப்பளவை சுத்திகரிக்கும் திறன் கொண்டது (CADR: 110 m³/h).
கூடுதல் அம்சங்கள் - 3 ஃபேன் வேக நிலைகள், 22dB அமைதியான இயக்கம், ஆட்டோ ஷட்-ஆஃப் டைமர், சைல்டு சேஃப்டி லாக், நைட் லைட் மற்றும் நறுமண எண்ணெய்களுக்கான (Aromatherapy) வசதி உள்ளது. பில்டரின் ஆயுட்காலம் 9,000 மணிநேரம் வரை வரும்.
விலை - ரூ. 3,999 .
Philips Air Purifier AC1711
நடுத்தர அளவிலான அறைகளுக்கு வேகமான மற்றும் நம்பகமான சுத்திகரிப்பை வழங்கும் மாடல்.
வடிகட்டுதல் & வேகம் - 3-அடுக்கு HEPA NanoProtect பில்டர் மூலம் 0.003 மைக்ரான் வரையிலான மாசுகளை 99.97% அகற்றும். 90 சதுர அடி வரையிலான நடுத்தர அறையை 10 நிமிடத்திற்குள் சுத்திகரிக்கும் (CADR: 300 m³/h).
சத்தம் & ஆற்றல் - மிக அமைதியான செட்டிங்கில் வெறும் 15 dB சத்தத்திலும், அதிகபட்ச வேகத்தில் 50 dB சத்தத்திலும் இயங்கும். இதன் மின் நுகர்வு வெறும் 27W மட்டுமே.
சென்சார் - AeraSense சென்சார் மூலம் PM2.5 அளவுகள் மற்றும் வண்ணக் குறியீடுகள் (Color-coded light) வழியாகக் காற்றின் தரத்தை உடனுக்குடன் காட்டும். இதன் எடை 3.78 கிலோ ஆகும்.
விலை விவரம் - சந்தையில் நடுத்தர பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த பிலிப்ஸ் மாடல்களில் ஒன்றாகும். இதன் விலை - ரூ.14,995,













