ஒரே நேரத்தில் அம்மாவையும் பொண்ணையும் கரெக்ட் செய்து 2வது மனைவியுடன் ஒரே வீட்டில்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்..
சிறுமி உள்பட இளம் பெண்களை மயக்கி உல்லாசம் அனுபவித்து வந்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் விஷ்வா (24). இவர் கடந்த ஆண்டு ஓசூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த கடையில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பிரிந்துவிட்டனர்.
illegal love age
பின்னர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பழக்கடையில் விஸ்வா வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது அதே பகுதியில் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த 25 வயது பெண்ணுடன் விஸ்வாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவருடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். அந்த பெண்ணை 2வதாக திருமணம் செய்து குழந்தைகளுடன் சேலம் அம்மாப்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினார்.
இதையும் படிங்க;- என்ன குழந்தைகள் சிவப்பா இருக்கு! காதல் மனைவி மீது தீராத சந்தேகம்! சிகரெட்டால் சூடு!சித்ரவதை செய்து கொன்ற கணவர்
Illegal love and fire
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 40 வயது பெண்ணுடன் விஸ்வாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த பெண்ணும் கணவரை பிரிந்து தனது 16 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அந்த பெண்ணுக்கும் விஷ்வா பண உதவியும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் 40 வயது பெண்ணிடம் ஒரே வீட்டில் வசித்து வந்தால் வாடகை மிச்சமாகும் என்பதால் 2வது மனைவியை சமாதானம் செய்து ஒரே வீட்டில் தங்க வைத்துள்ளார். அப்போது விஸ்வாவுக்கு 16 வயது சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. தாய்க்கு தெரியாமல் சிறுமியையும் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமியுடனும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது.
இதையும் படிங்க;- ஒரே வீட்டில் 3 வருஷமாக லிவிங் டு கெதர்! கரு கலைப்பு! திருமணமான 2 நாளில் எஸ்கேப்பான போலீஸ் காதலன்! கதறும் பெண்
இந்த விஷயம் தெரியவந்ததை அடுத்து அந்த சிறுமியின் உறவினர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து விஸ்வாவை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரால் மேலும் பல பெண்கள் ஏமாற்றி உள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.