MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • ப்ளீஸ் வேணாம் விட்டுடுங்க! நான் உங்க பொண்ணு மாதிரி! கதறியும் விடாமல் பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு ஆப்பு.!

ப்ளீஸ் வேணாம் விட்டுடுங்க! நான் உங்க பொண்ணு மாதிரி! கதறியும் விடாமல் பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு ஆப்பு.!

9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 06 2023, 11:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
rape

rape

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ரஹீம் என்ற கமர்தீன் (47). இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு அவரது கடைக்கு தின்பண்டம் வாங்க வந்த 9 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து துன்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

அப்படி இருந்த போதிலும் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

33
court hammer

court hammer

இந்நிலையில்,  சிறுமியை பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ரஹீம் என்ற கமர்தீனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தேனி மகிளா நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Recommended image2
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்
Recommended image3
Child Murder Case: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பில் திடீர் திருப்பம்.. 7 இடங்களில் எலும்பு முறிவு.. உடலில் 91 காயங்கள்.. அதிர்ச்சி தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved