- Home
- குற்றம்
- நானும் தேர்தலில் நிற்கிறேன்.. நான் தான் CM..! திடீரென களத்தில் குதித்த பார்த்திபன்: ஓஹ் இது தான் மேட்டரா
நானும் தேர்தலில் நிற்கிறேன்.. நான் தான் CM..! திடீரென களத்தில் குதித்த பார்த்திபன்: ஓஹ் இது தான் மேட்டரா
அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் ஒரு அறிவிப்பை வெளியிடப்போகிறேன் என்று தெரிவித்திருந்த நடிகர் பார்த்திபன் நான் தான் CM என்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அரசியல் களத்தில் பார்த்திபன்
நடிகரும், இயக்கநருமான பார்த்திபன் சினிமா துறையையும் தாண்டி தொலைநோக்கு அரசியல் பார்வையும், சமூக சிந்தனையும் உடையவராக அறியப்படுகிறார். இந்நிலையில், பார்த்திபன் தனது சமூக வலைதளப்பதிவில், “இன்று மாலை 4.46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது உஷார்!!!” என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
தேர்தலில் நிற்கிறேன்
இதன் தொடர்ச்சியாக வெளியான பார்த்திபனின் அறிவிப்பில், “பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!
நான் தான் CM
போடுங்கம்மா ஓட்டு Boat’சின்னத்தைப் பாத்து! இப்படிக்கு, C. M . சிங்காரவேலன் எனும் நான்…. ‘சோத்துக் கட்சி‘” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தில் சிங்காரவேலன் என்ற பெயரில், சோத்துக்கட்சி என்ற கட்சியில் படகு சின்னத்தில் முதல்வர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கின்றார்.
பெரியோர்களே, தாய்மார்களே,
வாக்காளப் பெருமக்களே!
ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக்… pic.twitter.com/bh4dZHUuuK— Radhakrishnan Parthiban (@rparthiepan) September 13, 2025