- Home
- குற்றம்
- என் மருமகளை இதற்காக தான் தலை துண்டித்து கொன்றேன்.. கொடூர மாமியார் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்
என் மருமகளை இதற்காக தான் தலை துண்டித்து கொன்றேன்.. கொடூர மாமியார் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்
கள்ளக்குறிச்சியில் மகனின் திருமணத்தில் அதிருப்தி அடைந்த மாமியார், மருமகளை மாந்திரீக பூஜை செய்வதாகக் கூறி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது தோழியின் உதவியுடன் மருமகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

எதிர்ப்பை மீறி திருமணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய ரொசாரியோ (36). பிசியோதெரபிஸ்ட். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கணவனை இழந்த நந்தனி (29) என்பவருடன் கடந்த 2018ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் திருமணத்திற்கு மரியரோசாரியோ குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி கடந்த 2019ம் ஆண்டு நந்தினியை மரியாரோசாரியோ திருமணம் செய்து கொண்டார்.
சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார்
வடசேமபாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு, கடந்த 2020ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் நந்தினியிடம் அவரது மாமியார் கிறிஸ்தோப்மேரி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நந்தினியை கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறி அவரது மாமியார் கிறிஸ்தோப்மேரி கடந்த டிசம்பர் 29-ம் தேதி அழைத்து சென்றுள்ளார். பின்னர் நந்தினி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மாமியார் கைது
இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் மாமியார் கிறிஸ்தோப்மேரியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது மருமகள் நந்தினியை கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலைக்கு உடந்தையாக இருந்த எமிலி(52) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
கிறிஸ்தோப் மேரி அளித்த வாக்குமூலம்
மேலும் கிறிஸ்தோப் மேரி அளித்த வாக்குமூலத்தில்: வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த நந்தினியை 2 குழந்தைகளுடன் தனது மகன் திருமணம் செய்து கொண்ட பிறகு என்னால் எந்த சுப நிகழ்ச்சிக்கு கூட செல்ல முடியவில்லை. எங்கு சென்றாலும் உன் மகன் என்ன 2 குழந்தைகளுடன் இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாராமே என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டு வந்தனர். நந்தினி கொலை செய்து விட்டு மகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க நினைத்தேன். எனது தோழி எமிலியுடன் சேர்ந்து நந்தினியை கொலை செய்ய திட்டமிட்டேன்.
இரண்டு பெண்கள் கைது
அதன்படி நானும் எனது தோழி எமிலியும் கடந்த 29ம் தேதி மாந்திரீகம் செய்ய வேண்டும் என்று கூறி நந்தினியை மணி ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றேன். அங்கே பூஜை செய்யும் போது, கண்ணை மூடிக்கொள் என்று கூறி, நந்தினியிடம் எலுமிச்சை பழத்தை கொடுத்தேன். அங்கிருந்த தோழி எமிலி பூஜை செய்வது போல் நடித்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் நந்தினி கழுத்தை அறுத்து கொலை செய்து புதைத்தோம் என்று கூறியுள்ளார்.

