எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது! கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை! விசாரணையில் வெளியான பகீர்.!
விக்கிரவாண்டி அருகே நர்சிங் கல்லூரி மாணவி தரணி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கணேசன் (25) என்ற இளைஞரை 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துதுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகன். இவரது மகள் தரணி(19). விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் தரணி தனது வீட்டில் தோட்டத்தில் இருந்த போது அங்கு மறைந்திருந்த வாலிபர் கண்ணிமைக்கு நேரத்தில் தரணியில் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பினார்.
மகளின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்த போது மகள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியில் கதறினர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தரணியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தரணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தரணியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கணேஷ் என்ற வாலிபரை தரணி காதலித்து வந்ததாகவும் அவர் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் மறைந்திருந்து தரணியை கொலை செய்தது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கணேசன் (25) என்ற இளைஞரை 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். கல்லூரி மாணவி வீட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.