அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கும்பகோணம் அருகே டியூசனுக்கு வந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மனைவி கோயிலுக்கு சென்றிருந்த நேரத்தில் விக்னேஷ் என்ற அந்த நபர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் அப்பகுதியில் குளிர்சாதன பெட்டிகளைப் பழுது நீக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு தினமும் டியூசன் எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி டியூசன் வந்துள்ளார். அப்போது மனைவி கோயிலுக்கு சென்ற நேரத்தில் விக்னேஷ் டியூசன் வந்த அந்த சிறுமியிடம் கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என விக்னேஷ் மிரட்டியுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் அழுத படியே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக இதுகுறித்துக் கும்பகோணத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது மகளுக்கு நேர்ந்த இந்த கொடுமைக்கு நியாயம் கேட்டும், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் விக்னேஷ் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ் புதுக்கோட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். டியூசனுக்கு வந்த இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

