- Home
- குற்றம்
- வேணாம்..டா என்ன விட்டுடுங்க! கதறிய கல்லூரி பேராசிரியை! குதறிய கொடூரன்கள்! இவர்களிடம் சிக்கியது எப்படி?
வேணாம்..டா என்ன விட்டுடுங்க! கதறிய கல்லூரி பேராசிரியை! குதறிய கொடூரன்கள்! இவர்களிடம் சிக்கியது எப்படி?
கேரளாவில், கல்லூரி பேராசிரியை ஒருவரை கொச்சிக்கு வரவழைத்த இரு நண்பர்கள், அவருக்கு வலுக்கட்டாயமாக போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பேராசிரியை காவல் நிலையத்தில் புகார்.

கல்லூரி பேராசிரியை
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலை அலுவலம் உள்ளிட்ட இடங்களில் பெண்களின் மீதான பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்ட போதிலும் குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கேரளாவில் பேராசிரியை ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரோஸ் (28). இவரது நண்பர் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த மார்டின் ஆண்டனி (27). இவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி மூலம் கல்லூரி பேராசிரியை அறிமுகமாகியுள்ளார். அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர்.
பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் பிரோஸ், மார்டின் ஆண்டனி ஆகிய 2 பேரும் பேராசிரியையை கடந்த 13-ம் தேதி கொச்சிக்கு வரவழைத்துள்ளார். அப்போது உயர்ரக போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை பேராசிரியை வேண்டாம் என்ற போதிலும் வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கினார். இந்நிலையில் பேராசிரியையை களமச்சேரி, நெடும்பாசேரி ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
இந்நிலையில் பாதிக்கப்பட்ட கல்லூரி பேராசிரியை கதறியபடி களமச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியில் அறிமுகமான பேராசிரியையை கொச்சிக்கு வரவழைத்து, போதைப்பொருள் கொடுத்து பிரோஸ், மார்டின் ஆண்டனி ஆகிய இருவரும் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது.
மருத்துவமனையில் அனுமதி
மேலும் பாதிக்கப்பட்ட பேராசிரியை மருத்துவ பரிசோதனைக்காக களமச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நட்பாக பழகி போதைப்பொருள் கொடுத்து கல்லூரி பேராசிரியை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.