MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கணவரை போட்டு தள்ளிவிட்டு நாடமாடிய மனைவி.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கணவரை போட்டு தள்ளிவிட்டு நாடமாடிய மனைவி.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை உள்ளிட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Aug 29 2023, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள செல்லிபாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (37). இவரது மனைவி பிரேமா (35). இவர்களுக்கு அனிஷ் (6), ஆகாஷ் (4) என 2 மகன்கள் உள்ளனர். கடந்த 23ம் தேதி அதிகாலை பிரேமா காது வலிப்பதாக கூறியதை அடுத்து கணவர் பெரியசாமி மோகனூர் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கணவர் இறந்துவிட்டதாக மோகனூர் காவல் நிலையத்தில் பிரேமா புகார் அளித்தார்.  

25

இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாகன விபத்தில் பெரியசாமி இறந்தும் பிரேமாவுக்கு சிறு காயம் ஏற்படாதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பிரேமாவின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், தருமபுரி மாவட்டம் நாட்ராம்பள்ளி பகுதியை சேர்ந்த நந்திகேசவன் (28) என்பவருடன் அடிக்கடி பேசியதும், அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. 

35

இதுகுறித்து பிரேமாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மோகனூரில் பிரேமா ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தபோது, அவருடன் பணியாற்றி வந்த நந்திகேசவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

45

அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர். நாளடைவில் இந்த விவகாரம் கணவர் பெரியசாமிக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துவிட்டு வேலைக்கு செல்லக்கூடாது என கூறிவிட்டார். அப்படி இருந்த போதிலும் செல்போனில் பேசி வந்துள்ளார். கள்ளக்காதலனை நேரில் பார்க்க முடியாமல் தவித்து வந்துள்ளார். 

55

இந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி  சம்பவத்தன்று அதிகாலை பிரேமா காது வலிப்பதாக கூறி கணவர் பெரியசாமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வழிமறித்த கள்ளக்காதலன் நந்திகேசவன் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் கணவர் விபத்தில் இறந்து விட்டதாக பிரேமா நாடகமாடியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக  பிரேமா, நந்திகேசவன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!
Recommended image2
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
Recommended image3
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved