- Home
- குற்றம்
- கல்யாணமான 4 மாதங்களில் 19 வயது மதுமிதா செய்த வேலை! கடுப்பான காதல் கணவர்! இறுதியில் நடந்தது என்ன?
கல்யாணமான 4 மாதங்களில் 19 வயது மதுமிதா செய்த வேலை! கடுப்பான காதல் கணவர்! இறுதியில் நடந்தது என்ன?
செங்கல்பட்டு அருகே, செல்போனில் ஆண் நண்பருடன் பேசியதால் சந்தேகமடைந்த கணவன், காதல் மனைவியை மலைக்கோவிலுக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்புதான் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

காதல் திருமணம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிலாவட்டம் பகுதியை சேர்ந்தவர் சரண் (24). கூலி தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்த மதுமிதாவுக்கும்(19) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததால் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மதுராந்தகம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
அடிக்கடி ஆண் நண்பருடன் பேசிய மதுமிதா
இந்நிலையில், மதுமிதா அடிக்கடி ஆண் நண்பருடன் தனது செல்போனில் பேசி வந்துள்ளார். இது சரணுக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக காதல் மனைவியை சரண் பலமுறை கண்டித்துள்ளார். மேலும் மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் யாருடன் பேசுகிறாய் என்ற கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மனைவி மீது சந்தேகத்தால் கொலை
இந்நிலையில், நேற்று மாலையில் மதுமிதாவை சமாதானப்படுத்துவது போல் நடித்து அச்சிறுபாக்கம் அடுத்த சென்னேரி பகுதியில் உள்ள மலை கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை சரமாரியாக அறுத்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் வந்து பார்த்தபோது இளம்பெண் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.
காதல் கணவன் கைது
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மதுமிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த சரணை கைது செய்து சிறையில் அடைத்தனர். வேறு ஒருவருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியதால் சந்தேகத்தில் காதல் மனைவியை கழுத்து அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

