MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • தந்தையை கட்டையால் அடித்து கொன்ற திமுக பிரமுகர்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்..!

தந்தையை கட்டையால் அடித்து கொன்ற திமுக பிரமுகர்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்..!

தந்தையை மகனே கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு யாரோ அடித்துக் கொன்று விட்டதாக நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 16 2023, 02:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
cuddalore

cuddalore

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் ராமு (69). இவர் சைக்கிள் பழுது நீக்கும் கடையை நடத்தி வந்தார். இவருக்கு புருஷோத்தமன், பிரபாகரன், மகாலிங்கம் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். புருஷோத்தமன் தனது மனைவியுடன் ராமு வீட்டில் வசித்து வருகிறார். புருஷோத்தமன் திமுக ஒன்றிய பிரதிநிதியாக உள்ளார். கடந்த மாதம் 24ம் தேதி இரவு வழக்கம் போல் வீட்டின் முன்பு தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மறுநாள் காலையில் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

34
cuddalore

cuddalore

மேலும், உயிரிழந்த ராமு குடும்பத்தினரின் செல்போன் எண்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது மகன் புருஷோத்தமன் (45) எனது தந்தையை நான் தான் அடித்து கொன்றேன் என தனது மனைவியிடம் பேசிய ஆடியோவை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில்  இடப்பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டையிட்டு வந்ததால் தனது தந்தையை உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்ததாக புருஷோத்தமன் கூறினார்.

44

 தந்தையை வேறு யாரோ அடித்துக் கொன்று விட்டதாக காவல் நிலையத்தில் மகன் புகார் கொடுத்து நாடகமாடி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக புருஷோத்தமனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
Recommended image2
அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா.. வெறியாட்டம் ஆடிய சக்திவேல்.. யார் இவர்?
Recommended image3
இரண்டு குழந்தைகளின் தாயான 26 வயது அமிர்தா.. 32 வயது சித்தேஷ்.. 24 மணி நேரத்தில் சிக்கியது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved