கட்டிலில் வாலிபருடன் உல்லாசம்.. நேரில் பார்த்த சிறுவன்.. ஓராண்டுக்கு பின் சிக்கிய சித்தி.. நடந்தது என்ன?
வாலிபருடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவனை கொலை செய்து கிணற்றில் வீசிய சித்தியை ஓராண்டு பிறகு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ஆர்.மடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கோபால் (45). கூலித்தொழிலாளி. கடந்த ஆண்டு கோபாலின் மனைவி இறந்துவிட்ட நிலையில் கவுசல்யா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை பரந்தாமன் (9). இந்நிலையில், வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த பரந்தாமனை திடீரென காணவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் தந்தை கோபால் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், மடத்துப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து பரந்தாமனின் உடலை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. முதலில் பரந்தாமன் விளையாடியபோது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் முதலில் நினைத்தனர்.
இருப்பினும் கவுசல்யா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த சேதுகாமேஷ் (35) என்பவருக்கும், கவுசல்யாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கவுசல்யாவை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது கவுசல்யா சேதுகாமேசும் வீட்டில் உல்லாசமாக இருந்த போது சிறுவன் பரந்தாமன் பார்த்துள்ளான். இது குறித்து கோபாலிடம் சொல்லி விடுவானோ என அச்சமடைந்த கவுசல்யா, பரந்தாமனை கழுத்தை நெரித்து கொலை செய்து கிணற்றில் வீசியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சித்தியை போலீசார் கைது செய்துள்ளனர். உல்லாசத்தை நேரில் பார்த்ததால் சித்தியே சிறுவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.