MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • கடைக்கு சென்ற இடத்தில் கண்டதும் காதல்! கள்ள உறவால் பிறந்த குழந்தை! கணவனுக்கு பயந்து பெண் செய்த காரியம்!

கடைக்கு சென்ற இடத்தில் கண்டதும் காதல்! கள்ள உறவால் பிறந்த குழந்தை! கணவனுக்கு பயந்து பெண் செய்த காரியம்!

கள்ளக்காதல் விவகாரத்தால் பிறந்த குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்த கொடூர தாயை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

1 Min read
Author : vinoth kumar
| Updated : Jul 05 2023, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சென்னை வேளச்சேரி சசிநகர் பகுதியில் உள்ள ஏரியில் பிறந்த சில மணிநேரம் ஆன பச்சிளம் பெண் குழந்தை சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வேளச்சேரி போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். 

24
chennai

chennai

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது,  அதே பகுதியில் வசித்து வரும் சங்கீதா (26) என்பவரின் குழந்தை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. 

34
illegal love

illegal love

சங்கீதாவுக்கு திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. வறுமையின் காரணமாக ஒரு பெண் குழந்தை போதும் என தம்பதியினர் முடிவு செய்தனர். இதனிடையே, சங்கீதாவுக்கும் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், சங்கீததா கர்ப்பம் அடைந்துள்ளார். சங்கீதாவின் வயிறு  பெரிதாகி வருவதை உணர்ந்த கணவர் கேட்ட போது சாப்பிட்டு தூங்குவதால் வயிறு பெரிதாகிவிட்டதாக கூறியுள்ளார். 

44

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சங்கீதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வீட்டு குளியல் அறையிலேயே தன்னிச்சையாக பெண் குழந்தையை பெற்றுள்ளார். பின்னர் கணவருக்கு தெரிந்தால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்பதால் குழந்தையை அருகில் இருந்த ஏரியில் வீசி விட்டு சங்கீதா, வீட்டிற்கு சென்றுதும் தெரியவந்துள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!
Recommended image2
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
Recommended image3
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved