MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • 28 வயது ஜிம் மாஸ்டர்.! 42 வயது யோகிதா! எந்நேரமும் ஓயாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி.. வெளியான பரபரப்பு தகவல்!

28 வயது ஜிம் மாஸ்டர்.! 42 வயது யோகிதா! எந்நேரமும் ஓயாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி.. வெளியான பரபரப்பு தகவல்!

பெங்களூருவில் ஜிம் பயிற்சியாளராக இருந்த திலீப், தன்னை விட மூத்தவரான யோகிதா என்ற பெண்ணுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். சொத்து கேட்டு யோகிதா மிரட்டியதால் மனமுடைந்த திலீப் தற்கொலை செய்து கொண்டார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 15 2026, 04:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : AI Meta

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த நெலமங்கள வஜ்ரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் திலீப் (28). பாடி பில்டரான இவர் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜிம் ஒன்றை நடத்தி கொண்டு பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : Asianet News

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திலீப்பின் ஜிம்மிற்கு எடையை குறைக்க யோகிதா (42) என்ற பெண் வந்துள்ளார். அப்போது அவருக்கு திலீப் பயிற்சி கொடுத்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி வெளியில் சென்று தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் யோகிதா நாளடைவில் தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளார்.

Related Articles

Related image1
மதுபான விற்பனையில் டாப் 10 மாநிலங்கள் எவை? தமிழ்நாடு எத்தனையாவது இடம் தெரியுமா?
Related image2
சென்னை மக்களே இன்று, நாளையும் உஷார்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை
35
Image Credit : our own

மேலும் பெண்ணின் கணவர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சமரசம் செய்து இனி ஒருவருக்கொருவர் சந்திக்க கூடாது என்று இருவரிடமும் போலீசார் எழுதி வாங்கியுள்ளனர். இருப்பினும் சொந்தமான வீட்டை தனது பெயரில் எழுதி வைக்க சொல்லி யோகிதா விடாமல் டார்ச்சர் செய்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான திலீப் வீட்டின் மேல் மாடிக்கு சென்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

45
Image Credit : Asianet News

திலீப்புக்கு பலமுறை போன் செய்தும் எடுக்காததால் இதோ விபரீதம் நடத்துள்ளதை அறிந்த யோகிதா இன்ஸ்டாகிராம் மூலம் திலீப்பின் சகோதரிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பதறியடித்துக் கொண்டு திலீப்பின் சகோதரி தனது தந்தையிடம் கூறியுள்ளார். அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது திலீப் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீலிப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

55
Image Credit : X

இந்த சம்பவம் தொடர்பாக திலீப்பின் பெற்றோர் யோகிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் யோகிதா தொடர்ந்து கொடுத்த மிரட்டல் மற்றும் சொத்து கேட்டு செய்த டார்ச்சர் தான் திலீப்பின் இந்த முடிவுக்கு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திலீப்பின் செல்போனை கைப்பற்றி அதில் உள்ள வீடியோக்கள் மற்றும் உரையாடல்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரகசிய காதலி கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாமல் ஜிம் மாஸ்டர், வீடியோ கால் பேசியபடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
காவல் நிலையம்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
Recommended image2
அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா.. வெறியாட்டம் ஆடிய சக்திவேல்.. யார் இவர்?
Recommended image3
இரண்டு குழந்தைகளின் தாயான 26 வயது அமிர்தா.. 32 வயது சித்தேஷ்.. 24 மணி நேரத்தில் சிக்கியது எப்படி?
Related Stories
Recommended image1
மதுபான விற்பனையில் டாப் 10 மாநிலங்கள் எவை? தமிழ்நாடு எத்தனையாவது இடம் தெரியுமா?
Recommended image2
சென்னை மக்களே இன்று, நாளையும் உஷார்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved