ஆரம்பித்த ஒரே வருடத்தில் முடிவுக்கு வரும் சூப்பர் ஹிட் சீரியல்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், துவங்கிய ஒரே வருடத்தில் முடிவுக்கு வருகிறது பல ரசிகர்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஹிட் தொடர்.
Ninaithen Vandhai Serial
விஜய் டிவி மற்றும் சன் டிவிக்கு அடுத்தபடியாக அதிகப்படியான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது ஜீ தமிழ். ஆனால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அடுத்தடுத்து ஓரிரு வருடத்திலேயே முடிவை எட்டி விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட்ட, நினைத்தேன் வந்தாய் சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Ganesh Venkat Ram
காதல், எமோஷன், ஹாரர் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான தொடராக ஒளிபரப்பாகி வரும் 'நினைத்தேன் வந்தாய்' சீரியலை பிரம்மா ஜி தேவ் என்பவர் ஆரம்பத்தில் இயக்கி வந்த நிலையில், தற்போது ஜீவ ராஜன் என்பவர் இயக்கி வருகிறார். சுமார் 250 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவை எட்ட உள்ளது.
நான் என்ன மனோரமா மாதிரியா? வடிவேலு பேச்சால் சண்டைக்கு போன சரோஜா தேவி - ரமேஷ் கண்ணா பகிர்ந்த தகவல்!
Ninaithen Vandhai Serial update
இந்த சீரியலில் கணேஷ் வெங்கட்ராம் மருத்துவர் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தனா பொதுவால் மற்றும் அபிராமி வெங்கடாசலம் நடித்த வருகின்றனர். மருத்துவராக இருக்கும் எழில், இந்துமதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நிலையில் அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். அஞ்சலி என்கிற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் நிலையில், இந்துமதி எழிலின் தோழி மனோகரி சூழ்ச்சியால் விபத்தில் சிக்கி உயிரிழக்கிறார். எழிலை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் மனோகரி ஒரு புறம் இருக்க, பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வரும் சுடர்விழியை எழில் திருமணம் செய்து கொள்ள நேர்கிறது.
Ninaithen Vandhai ending soon
சுடருக்கு எதிராக மனோகரி பல விஷயங்களை செய்ய, அதிலிருந்து இந்துமதியின் ஆவி சுடரை காப்பாற்றுகிறது. சுடர்... எழிலைத் திருமணம் செய்து கொள்ள இந்துமதி தான் காரணமாகவும் அமைகிறார். பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் மனோகரின் சுயரூபம் வெளியே வர துவங்கி உள்ளது. இந்நிலையில் இந்த தொடர் கிளைமாக்ஸ் எட்ட உள்ளதாகவும், அதன்படி விரைவில் நினைத்தேன் வந்தாய் சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக வெளியாகி உள்ள தகவல், ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பொங்கல் ரிலீஸில் இருந்து பின் வாங்கிய 'விடாமுயற்சி'! இரண்டும் இல்லாமல் ஏமார்ந்து போன ரசிகர்கள்!