Karthigai Deepam: ரேவதிக்காக போலீசை சந்திக்கும் கார்த்திக் - கார்த்திகை தீபம் அப்டேட்!
விறுவிறுப்பாகவும்... பரபரப்பான கதைக்களத்திலும் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடில் நடந்தது என்ன என்பது பற்றிய தகவல்களை பார்ப்போம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
கார்த்திக் - ரேவதி திருமணம்:
கார்த்திக் - ரேவதி திருமணம் ஒருவழியாக நடந்து முடிந்த நிலையில், ரேவதி தன்னுடைய திருமணம் நின்று போக காரணம் கார்த்திக் என நினைப்பதால் அவன் மீது கோபத்தை கொட்டுகிறாள். இந்த நிலையில் இன்றைய எபிசோட் குறித்து பார்க்கலாம்.
மூலிகை பால்:
அதாவது, பரமேஸ்வரி பாட்டி கொடுத்த மூலிகை பாலை சாமுண்டீஸ்வரி குடித்துவிட, மீதம் இருந்த பாலை மயில்வாகனம் தனது மனைவி ரோகிணிக்கு கொடுக்க இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கிறது.
கார்த்திக்கை வெறுப்பேற்றுவது போல் பேசும் ரேவதி:
மறுபக்கம் சாந்தி முகூர்த்த அறைக்கு வரும் ரேவதி, கார்த்தியிடம் என்னோட புடவை புடிச்சிருக்கா? நகைகள் பிடிச்சிருக்கா? மேக்கப் பிடிச்சிருக்கா? என அவனை வெறுப்பேற்றுவது போல கேட்கிறாள், பிடிக்கலைன்னா உடனே சொல்லுங்க நான் போய் மாத்திட்டு வந்திருடுறேன் என கோபத்தை நெருப்பாக கார்த்திக் மீது கொட்டி, இந்த வீட்டில் எல்லாம் நீங்க சொல்ற மாதிரி தானே நடக்குது என வேண்டா வெறுப்பாக பேசுகிறாள்.
ராஜராஜனை கிண்டல் பண்ணும் மயில் வாகனம்:
கார்த்திக் என்ன ரேவதி இப்படி எல்லாம் பேசுறீங்க? இந்த கல்யாணம் நின்னு போனதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்ல ரேவதி அதை நம்ப மறுக்கிறாள். கார்த்திக் பெட்டில் அமர்ந்திருப்பதால், கீழே பெட்ஷீட் விரித்து படுத்து கொள்கிறாள். அடுத்த நாள் காலையில் தான் ஆசைப்பட்ட மாதிரியே ரோஹிணியுடன் நெருக்கமாக இருந்த சந்தோசத்துடன் மயில்வாகனம் வெளியே வர, ராஜராஜனும் சந்தோசமாக வர மயில்வாகனம் என்ன மாமா ரொம்ப சந்தோசமா வரீங்க என்று கலாய்க்க அவரும் வெட்கப்பட்டு சிரிக்கிறார்.
போலீசில் புகார் கொடுக்க தயாராகும் மாயா
இதை தொடர்ந்து கார்த்திக், மகேஷ் காணாமல் போன விஷயத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என நிரூபிப்பதற்காக மகேஷை கண்டு பிடிக்கணும், அவன் வந்தா தான் ரேவதிக்கு என்னை பற்றி புரிய வைக்க முடியும் என பேசுகிறான். இன்னொரு பக்கம் மாயா, சந்திரகலா மற்றும் சிவனாண்டி ஆகியோர் ஒன்று சேர்ந்து மகேஷை கண்டுபிடிக்க போலீசில் புகார் செய்ய முடிவு செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.