MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • யூத் முதல் LIK வரை... அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 6 தமிழ் படங்கள் என்னென்ன?

யூத் முதல் LIK வரை... அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 6 தமிழ் படங்கள் என்னென்ன?

2026-ம் ஆண்டு தொடங்கி கடகடவென 4 மாதங்கள் ஓடிவிட்டன. இந்த நான்கு மாதங்களில் தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்கள் வந்துள்ளன. அவற்றில் டாப் 6 படங்களை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 21 2026, 11:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Highest Grossing Tamil Movies in 2026
Image Credit : X

Highest Grossing Tamil Movies in 2026

தமிழ் சினிமாவிற்கு 2026ம் ஆண்டு ஏமாற்றங்களும், ஆச்சர்யங்களும் நிறைந்த ஆண்டாகவே இருந்து வருகிறது. இந்த ஆண்டு கோலிவுட் பெரிது நம்பி இருந்த படம் ஜனநாயகன், ஆனால் அப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எதிர்பார்த்த பெரிய படங்கள் எல்லாம் சோபிக்க தவறினாலும் தாய் கிழவி, யூத், வித் லவ் என பல சின்ன படங்கள், எதிர்பார்ப்பின்றி ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடியது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 6 படங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

27
6. வித் லவ்
Image Credit : X

6. வித் லவ்

இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமான படம் வித் லவ். இப்படத்தை ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா தயாரித்திருந்தார். இப்படத்தில் நாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து அமோக வரவேற்பை பெற்றது. 10 கோடிக்கும் கம்மியான பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.38 கோடி வசூலித்து அதிக வசூல் அள்ளிய படங்களின் பட்டியலில் 6-ம் இடத்தை பிடித்துள்ளது.

Related Articles

Related image1
OTTக்கு பார்சல் செய்யப்பட்ட யூத்... அதன் லைஃப் டைம் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
Related image2
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வசூல் வேட்டை: இரண்டே நாட்களில் ₹22 கோடி வசூலித்து மாஸ் காட்டும் பிரதீப் ரங்கநாதன்!
37
5. தலைவர் தம்பி தலைமையில்
Image Credit : X

5. தலைவர் தம்பி தலைமையில்

நடிகர் ஜீவாவுக்கு கம்பேக் படமாக அமைந்தது தான் தலைவர் தம்பி தலைமையில். இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்து இருந்தார். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் ஆகாததால், அவசர அவசரமாக ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம், பொங்கல் வின்னராக மாறி பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் ரூ.40 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டி, இந்த பட்டியலில் 5-ம் இடத்தை பிடித்து அசத்தி உள்ளது.

47
4. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி
Image Credit : X

4. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ந் தேதி திரைக்கு வந்த படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் வசூலில் மந்தமாக நகர்ந்து வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆகி 10 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், தற்போது வரை உலகளவில் ரூ.55.2 கோடியை மட்டுமே வசூலித்திருக்கிறது. இப்படம் இந்த பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

57
3. யூத்
Image Credit : X

3. யூத்

நடிகர் கருணாஸின் மகன் கென் ஹீரோவாக அறிமுகமான படம் யூத். இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளது மட்டுமின்றி இயக்கியும் இருக்கிறார் கென். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் ரூ.76 கோடி வசூல் கிடைத்தது. இதன்மூலம் இந்த ஆண்டு அதிக வசூலை வாரிக்குவித்த படங்களின் பட்டியலில் யூத் 3ம் இடத்தை பிடித்துள்ளது.

67
2. பராசக்தி
Image Credit : X

2. பராசக்தி

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையங்குகளில் வெளியான படம் பராசக்தி. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாக பெரியளவில் சோபிக்காவிட்டாலும், பாக்ஸ் ஆபிஸில் ரூ.83 கோடி வசூலித்து இருக்கிறது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

77
1. தாய் கிழவி
Image Credit : X

1. தாய் கிழவி

2026-ம் ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய படம் என்றால் அது ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி தான். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து இருந்தார். சிவக்குமார் முருகேசன் இயக்கிய இப்படம், கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. இப்படம் 10 கோடி பட்ஜெட்டில் உருவாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.84 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. இப்படம் தான் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?! திருவிழா கோலத்தில் நீலாங்கரை.!!!
Recommended image2
மிகப்பெரிய உண்மையை மறைத்த விஜயா; அடிக்க பாய்ந்த அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image3
குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறும் ஜனனி... மன்னிப்பு கேட்பாரா கதிர்? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
OTTக்கு பார்சல் செய்யப்பட்ட யூத்... அதன் லைஃப் டைம் வசூல் எத்தனை கோடி தெரியுமா?
Recommended image2
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி வசூல் வேட்டை: இரண்டே நாட்களில் ₹22 கோடி வசூலித்து மாஸ் காட்டும் பிரதீப் ரங்கநாதன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved