அடக்கடவுளே யோகி பாபுவின் இந்த ஆசையும் நிறைவேறலையா..? குழந்தை பிறந்தபின் உலா வரும் தகவல்!
தமிழ் சினிமாவில் தற்போது டாப் காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கும் யோகி பாபுவிற்கு டிசம்பர் 28 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்த தகவல் வெளியானது. இதை தொடர்ந்து பலர் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், யோகி பாபுவின் நிறைவேறாத ஆசை பற்றிய ஒரு தகவல் உலா வருகிறது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் அனைவருடனும் காமெடியனாக ஒரு ரவுண்ட் வந்து கலக்கிவிட்டார்.
கைவைசம் எக்கச்சக்க படங்களை வைத்துக் கொண்டு பிசியாக வலம் வரும் யோகிபாபு கடந்த பிப்ரபவரி மாதம் தனது திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தி முடித்தார்.
பின்னர் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். திடீர் என கொரோனா பிரச்சனை தீவிரமாக தலை தூங்கியதால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க பட்டது.
எனவே திருமண வரவேற்பு ஏற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தான், யோகி பாபுவின் மனைவி மஞ்சு பார்கவி கர்ப்பமானார் . இவருக்கு நெருங்கிய நண்பர்கள் குடும்பத்தை சேர்ந்த 100 பேரை அழைத்து, பிரமாண்டமாக வளைகாப்பு நடத்த திட்டமிட்டிருந்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக, மஞ்சு பார்கவி வளைகாப்பு நடைபெற இருந்த ஒரு நாளுக்கு முன்னதாகவே பிரசவவலி ஏற்பட்டு அழகிய ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
நண்பர்களுக்கு கல்யாண சாப்பாடு தான் போடமுடியவில்லை, சீமந்தத்துக்காவது விருந்து கொடுக்கலாம் என நினைத்த யோகி பாபுவால் அதுவும் முடியாமல் போகியுள்ளது என ஜாலியாக கமெண்ட் அடித்து வருகிறாராம்.
எது எப்படி ஆனால் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் செம்ம ஹாப்பி அண்ணாச்சி யோகி பாபு.