சிறுவாபுரி கோவிலில் தீண்டாமை கொடுமை நடந்ததா? நடிகர் யோகி பாபு பரபரப்பு விளக்கம்!
நடிகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு அர்ச்சகர் மூலம் தீண்டாமை கொடுமை நடந்ததாக ஒரு வீடியோ வெளியாகி வைரலான நிலையில், இதுகுறித்து யோகிபாபு விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடி வேடத்திலும், சில திரைப்படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து கொண்டிருக்கும் யோகி பாபுவின் கைவசம் தற்போது டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது. அதே போல் பாலிவுட் திரையுலகிலும் அட்லீ இயக்கத்தில் ஷாருகான் நடித்துள்ள 'ஜவான்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
Tamil actor Yogi Babu
'ஜவான்' படத்தின் ரிலீசுக்கு பின்னர், அவரின் காமெடி பாலிவுட் திரையுலகிலும் அதிகம் ரசிக்கப்படும் பட்சத்தில்... இந்தி படங்களிலும் இவர் பிசியாக நடிக்க துவங்கினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. நிற்க கூட நேரம் இல்லாமல், படு பிஸியான நடிகராக இருக்கும் யோகி பாபுவுக்கு முருகர் என்றால் அவ்வளவு இஷ்டம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகே இருக்கும் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போல் ஷூட்டிங் இல்லாத நாட்களில், சென்னையில் உள்ள சிறுவாபுரி முருகர் கோவிலுக்கு செல்வது இவரின் வழக்கம்.
பிரபல இளம் நடிகையை திருமணம் செய்யபோகிறாரா நடிகர் விஷால்? சமூக வலைத்தளத்தை சூடாக்கிய தகவல்!
அந்த வகையில் சமீபத்தில் இவர் சிறுவாபுரி முருகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து முடித்த பின்னர், புரோகிதர் ஒருவருக்கு கை கொடுக்கும் போது, அவர் யோகி பாபுவின் கையை தொடாமல் ஆசி வழங்கியது போல் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ படு வைரலாக பரவியது. இதை பார்த்த ரசிகர்கள் சிலர் தீண்டாமை கொடுமை யோகி பாபுவுக்கு நடந்து விட்டதாக கூறிவந்த நிலையில்... இந்த வீடியோ குறித்து தற்போது யோகி பாபு விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சிறுவாபுரி கோவிலுக்கு 12 ஆண்டுகளுக்கும் மேலாக நான் சென்றுகொண்டிருக்கிறேன். அப்போதிருந்தே அந்த குருக்களை எனக்கு தெரியும்." "வேண்டுமென்றே யாரோ இப்படி வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். அது பழைய வீடியோ. இதில் சாதி பார்க்க வேண்டாம், குருக்களால் தீண்டாமை எதுவும் நடைபெறவில்லை" என தெரிவித்துள்ளார்.
Breaking: விஜய்யின் பிரெண்ட்ஸ் பட இயக்குனர் சித்திக் காலமானார்!