இது சாமி விஷயம், முன்னோர்களுக்கு முன்பு உருவானது: கையில் கட்டிய கயிறு பத்தி பேசிய யோகி பாபு!
Yogi Babu Gives Explanation about his Black Rope in his hand Secret : நாளுக்கு நாள் கையில் கயிறு கூடிக் கொண்டே போகிறது என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு யோகி பாபு நச்சென்று பதிலளித்துள்ளார்.
Yogi Babu Gives Explanation about his Black Rope in his hand Secret
Yogi Babu Gives Explanation about his Black Rope in his hand Secret : தமிழ் சினிமாவில் முன்னணி காமெட் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகி பாபு. ரஜினிகாந்த், விஜய், சூர்யா, ரவி மோகன், விஜய் சேதுபதி, ஷாருக் கான் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். காமெடி நடிகரையும் தாண்டி ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஹீரோக்களை விட அதிக படங்களில் நடித்து வருகிறார். உருவ கேலிக்கு மத்தியில் சினிமாவில் சாதித்து காட்டி வருகிறார்.
Comedy Actor Yogi Babu
ஒவ்வொரு படமும் முடிந்த பிறகு யோகி பாபுவை பக்தி மையமாக தான் பார்க்க முடியும். அதோடு கோயில் கோயிலாக சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சமீபத்தில் கூட கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மோரனபள்ளியில் ராகு கேது அதர்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதோடு சாமிக்கு தனது கையால் தீபாராதனை காண்பித்தும் வழிபட்டார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
Yogi Babu Filmography
இதே போன்று திருச்செந்தூர், திருத்தணி என்று பல கோயில்களுக்கு சென்று வந்துள்ளார். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட யோகி பாபு தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் முன்னதாகவும், படத்திற்கு பின்னும் கோயிலில் வழிபாடு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அதோடு, கையில் பல நிறங்களில் கயிறும், காப்பும், தாயத்தும் கட்டியிருப்பார். ஆனால், படங்களில் அப்படி அவரது கையில் எதுவுமே இருக்காது. எனினும் ஒரு சில படங்களில் அப்படியே நடித்திருப்பார்.
Yogi Babu Gives Explanation about his Black Rope in his hand Secret
பொதுவாகவே ஆன்மீக பற்று கொண்டவர்கள் திருஷ்டி விழாமல் இருக்க கையில், கழுத்தில், காலில் கருப்பு நிற கயிறு கட்டுவார்கள். இது தொன்றுதொட்டு இருந்து வரும் ஒரு பழக்கம் தான். இந்தப் பழக்கம் இன்றைய இளைஞர்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு சிலர் பச்சை, சிகப்பு, மஞ்சள் என்று பல நிறங்களில் இருக்கும் கயிறுகளை தங்களது கையில் கட்டிக் கொள்வார்கள்.
Yogi Babu Temple Visit
அப்படித்தான் யோகி பாபுவும் தன்னுடைய கையில் நிறைய கயிறுகளை கட்டியிருக்கிறார். இது குறித்து அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதில், நாளுக்கு நாள் உங்களது கையில் கயிறு அதிகமாக காரணம் என்ன என்பது போன்ற ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த யோகி பாபு இது சாமி விஷயம். மேலும், இது சம்மந்தமில்லாத கேள்வி. நீ இல்ல, நான் இல்ல நம் முன்னோர்களுக்கு முன் உருவான விஷயம் இது. இதைப் பற்றி பேச வேண்டாம் என்று நச்சென்று பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.