MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அப்படி மட்டும் நான் பண்ணியிருந்தா... கொந்தளித்த யாஷிகா ஆனந்த்... வெளிச்சத்திற்கு வந்த உண்மை...!

அப்படி மட்டும் நான் பண்ணியிருந்தா... கொந்தளித்த யாஷிகா ஆனந்த்... வெளிச்சத்திற்கு வந்த உண்மை...!

கார் விபத்து நிகழ்ந்த அன்று தான் குடிக்கவில்லை என்று யாஷிகா ஆனந்தே விளக்கம் அளித்துள்ளார்.

2 Min read
Kanimozhi Pannerselvam
Published : Aug 03 2021, 02:25 PM IST| Updated : Aug 03 2021, 02:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் சமீபத்தில் தான் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். கடந்த ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பிய, யாஷிகா ஆனந்த் டாடா ஹேரியர் காரை படுவேகமாக ஓட்டியுள்ளார். அப்போது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதிய கார் விபத்துக்குள்ளானது.

26
Yashika anand

Yashika anand

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் இருக்கையில் இருந்ததால் யாஷிகாவின் நண்பர்கள் அமீர், சையது ஆகியோர் சிறு காயங்களுடன் தப்பியதாக தெரிகிறது. விபத்தில் உடல் முழுவதும் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

36
yashika

yashika

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு சற்றே உடல் நலம் தேறிய யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியான வள்ளி செட்டி பவணி மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டிருந்தார். 

46
Yashika anand

Yashika anand

இதனிடையே  யாஷிகா ஆனந்த் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தியதாகவும், தோழியின் மரணத்திற்கு காரணமானதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

56
Yashika anand

Yashika anand

விபத்து நிகழ்ந்த அன்று தான் குடிக்கவில்லை என்று யாஷிகா ஆனந்தே விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், சட்டம் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். சில தரக்குறைவான மனிதர்கள் நான் கார் ஓட்டும் போது மது அருந்தி இருந்ததாக வதந்தி பரப்பி வருகின்றனர். இதுகுறித்து உங்களிடம் ஒரு விஷயத்தை உறுதிபடுத்த விரும்புகிறேன். போலீஸ் தரப்பிலிருந்தே நாங்கள் யாரும் குடித்துவிட்டு வண்டி ஓட்டவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி மட்டும் நான் குடித்திருந்தால் இந்நேரம் ஜெயிலில் தான் இருந்திருப்பேன், ஹாஸ்பிட்டலில் இல்லை. போலீஸ் மற்றும் மருத்துவர்களின் அறிக்கையிலும் அப்படி தான் உள்ளது. 

66
Yashika anand

Yashika anand

சில நாட்களாகவே போலியான மனிதர்கள் சிலர் என்னைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் இது மிகவும் சிக்கலான விஷயம். மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். சில போலி ஊடகங்கள் பார்வையாளர்களை கவர்வதற்காக என்னைப் பற்றி போலியான செய்திகளை பதிவிட்டு வருகின்றன. அது அவங்களுக்கு தான் அவமானம். இதேமாதிரி நடந்ததற்காக இரண்டு வருடங்களுக்கு முன்பு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளேன். ஆனால் சிலர் இப்போதும் வதந்திகளை பரப்புவதற்காக எந்த எல்லைக்கும் செல்கிறார்கள் என பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
Recommended image2
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!
Recommended image3
பவன் கல்யாணுக்காக ராம் சரண் தியாகமா? ரிலீஸ் தேதியை மாற்றிய 'கேம் சேஞ்சர்' நாயகன்; ரசிகர்கள் கவலை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved