உலக அளவில் அதிகம் தேடப்பட்ட தலைப்பு இந்த முன்னணி நடிகரின் படத்தின் பெயர் தான்? வெளியான ஆச்சர்ய தகவல்!
சமூக வலைத்தளத்தில் உலகம் முழுவதும் கடந்த 30 நாட்களில் அதிகம் தேடப்பட்ட படத்தின் பெயர் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி அனைவரையம் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
பொதுவாகவே, புராண கதைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும். அந்த வகையில் பாகுபலி நாயகன் பிரபாஸ், தற்போது ராமாயண கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் 'ஆதிபுருஷ்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் அதிகமாகவே உள்ளது.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் 'ஆதிபுருஷ்' படத்தை, பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான ஓம் ராவத் இயக்கியுள்ளார். இதில் கீர்த்தி சனோன் சீதையாகவும், சயீப் அலி கான் ராவணனாகவும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான போது, பிரபாஸின் தோற்றத்திற்கு பல பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும், சயீப் அலிகானின் தோற்றம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது.
3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், டீசர் வெளியான பொம்மை படம் போல் இருக்கிறது என்கிற விமர்சனங்களும் எழுந்தது. இந்த படத்திற்கு சன்சிட் பல்ஹாரா, அன்கிட் பல்ஹாரா என சகோதரர்கள் இருவர் இசையமைத்துள்ளனர். இந்த படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றனர்.
அடுத்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாகி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் குறித்து தற்போது படக்குழு வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 30 நாட்களில் உலக அளவில் 'ஆதிபுருஷ்' என்கிற தலைப்பு தான் அதிக பச்சமாக தேடப்பட்டுள்ளதாம். இதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கான மிகப்பெரிய உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.