இதனால தான் தளபதி விஜய் இன்று தவெக கொடியை அறிமுகம் செய்தாரா?
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை விஜய் அறிமுகப்படுத்தினார். மஞ்சள், அடர் சிவப்பு நிறத்தில், இரண்டு போர் யானைகள் மற்றும் வாகை மலர் கொண்ட கொடி இது. 2026 தேர்தலில் போட்டியிடும் த.வெ.க, தமிழ்நாட்டின் வெற்றிக்கான கொடியாக இது அமையும் என விஜய் நம்பிக்கை தெரிவித்தார்.
Vijay
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். மேலும் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும் அவர் கூறியிருந்தார். அதற்கு முன் ஏற்கனவே ஒப்பந்தமான இரண்டு படங்களை முடித்துக் கொடுத்து விட்டு சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.
Vijay Launch TVK Flag
இந்த நிலையில் இன்று த.வெ.க கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்து வைத்தார். பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தில் கொடி அறிமுக விழா நடைபெற்றது. மஞ்சள், அடர் சிவப்பு நிறத்தில் உள்ள இந்த கொடியில் இரண்டு போர் யானைகள் மற்றும் வாகை மலர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
வாழ்த்துக்கள் விஜய் அண்ணா; முதல் ஆளாக முந்திக்கொண்டு வாழ்த்து கூறிய பிரபலம்!
Vijay
பின்னர் பேசிய விஜய் “ தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறேன். இதுவரை நமக்காக உழைத்தோம், இனி தமிழ்நாட்டிற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் உழைப்போம். இது வெறும் கட்சி கொடியாக நான் பார்க்கவில்லை தமிழ்நாட்டின் வருங்கால வெற்றிக்கான கொடியாகவே பார்க்கிறேன்” என்று கூறினார்.
Vijay
இந்த விழாவில் தவெகவின் கட்சி பாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தவெகவின் கொடியை அறிமுகம் செய்ய விஜய் ஏன் 22-ம் தேதியை தேர்வு செய்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய்க்கு பிடித்த எண் 4 என்று கூறப்படுகிறது.
விஜய்யின் கட்சி கொடியில் இருக்கும் வாகை மலரில் இவ்வளவு சிறப்பு இருக்கா?
Vijay Car
இன்று தேதி 22. இதன் கூட்டுத்தொகை 4. விஜய் பயணித்து வந்த காரின் எண் 1111, இந்த எண்ணின் கூட்டுத்தொகையும் 4. விஜய் பிறந்த தேதி 22. இதன் கூட்டுத்தொகையும் 4. இதன் காரணமாகவே விஜய் 22-ம் தேதியை தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.