சமந்தாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? 200 கோடி ஜீவனாம்சத்தை மறுத்தது ஏன்... வெளியான தகவலை!
நடிகை சமந்தா (Samantha Ruth Prabhu), நாகசைதன்யாவிடம் (Nagachaitanya) இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், தன்னுடைய வாழ்நாள் ஜீவனாம்சத்தை (alimony) வேண்டாம் என நிராகரித்ததாக செய்திகள் வெளியானது. ஏன்? சமந்தா இப்படி செய்தார் என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில், இளம் நட்சத்திர ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்த சமந்தா - நாக சைதன்யா, இருவரும் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வந்த விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் என தங்களுடைய பிரிவை பற்றி அறிவித்தனர். ஆனால் தற்போது வரை இவர்களது விவாகரத்து குறித்த உண்மை காரணம், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை தவிர யாருக்கும் தெரியாது.
அதே நேரத்தில் சமந்தா நாக சைதன்யா குடும்பத்திடம் இருந்து எந்த ஒரு ஜீவனாம்சமும் பெற வில்லை என பல ஊடகங்கள் உறுதி செய்துள்ளது.
தற்போது சமந்தா ஏன் அவரது குடும்பத்தினர் கொடுக்க தயாராக இருந்த 200 கோடி பணத்தை தவிர்த்தார் எந்தது குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
34 வயதே ஆகும் சமந்தா, திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர். IWMBuzz இல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, அவரது சொத்து மதிப்பு சுமார் 84 கோடி என கூறப்படுகிறது.
ஒவ்வொரு படத்திற்கும் அவர் சுமார் 3 கோடி ரூபாய் சம்பளமாக பெறுவது மட்டும் இன்றி, இதர வகையில் அவரது மாத வருமானம் சுமார் 25 லட்சம் என்றும் கூறப்படுகிறது.
அது தவிர, சமந்தா ஒரு தொழிலதிபர். அவர் சாகி என்ற பேஷன் லேபிளை வைத்திருக்கிறார். இது சமீபத்தில் ஒரு வருட வெற்றிவிழாவை கொண்டாடியது. மேலும், கடந்த ஆண்டு, சமந்தா ஹைதராபாத்தில் ஏகம் என்ற பெயரில் ஒரு ப்ரீ - ஸ்கூல் ஒன்றையும் தொடங்கினார்.
ஏகம் சீர்திருத்தத்தையும் கல்வியில் சிறப்பையும் குழந்தைகளிடம் கொண்டுவருவதற்காக உருவாக பட்டது. இதில் சமந்தாவிற்கு, ஷில்பா ரெட்டி மற்றும் முக்தா என்ற இரண்டு பாட்னார்ஸும் உள்ளனர். திரைப்படங்கள் மற்றும் அவரது தொழில்களைத் தவிர, லூயிஸ் உய்ட்டன், மிந்த்ரா, ட்ரூல்ஸ், ஏரியல், ஹிட்டாச்சி போன்ற விளம்பர ஒப்புதல்களிலிருந்தும் சமந்தா பணம் சம்பாதிக்கிறார்.
மேலும் தனது முதல் இந்தி வலைத் தொடர், தி ஃபேமிலி மேன் 2 வெற்றிக்குப் பிறகு, சமந்தாவிற்கு பல பாலிவுட் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும், இதனால் அவர் ஹைதராபாத்தில் இருந்து மும்பை செல்ல கூடும் என்கிற தகவலும் வெளியானது. ஆனால் சமந்தா ஹைதராபாத்தில் தான் இருப்பேன் என கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், விரைவில் பாலிவுட் படங்களில் இவரை பார்க்க வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.
இப்படி பல்வேறு விதத்தில் சமந்தாவிற்கு பணம் கொட்டோ கொட்டோ என கொட்டுவதாலேயே, நாக சைதன்யா குடும்பத்தின் பணத்தை சமந்தா நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.