பிக்பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்ஷன் - வெளியேறியது யார்? காத்திருந்த ட்விஸ்ட்!
Who Was Evicted in the Bigg Boss Tamil Mid Week: பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் மாஸ்க் பட புரமோஷனுக்காக கவின் அதிரடியாக வீட்டுக்குள் வந்து மிட் வீக் எவிக்ஷன் என கூறி பீதியை கிளப்பியுள்ளார். என்ன நடந்தது என்பது பற்றி பார்ப்போம்.

பிக்பாஸ் சீசன் 9
விஜய் டிவியில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிபார்வையாளர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி ஷோவாக உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஒரு திருப்பமும், ஒவ்வொரு வாரமும் புதிய பரபரப்பும் கொடுத்து கொண்டிருக்கும் இந்த சீசன், மற்ற எல்லா சீசன்களைவிட அதிக சண்டைகளுடன் கவனத்தை ஈர்த்துள்ளது.
50 நாட்களை நோக்கி நகர்ந்து வருகிறது:
இந்த முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி, தனது சாமர்த்தியமான பேச்சு, கலகலப்பான பதில்கள் மற்றும் போட்டியாளர்களிடம் தன்னுடைய தனித்துவமான அணுகுமுறையால் அதிக கவனம் பெற்றுள்ளார். கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய இந்த 9வது சீசன், இப்போது 50 நாட்களை நோக்கி நகர்ந்து வருகிறது. வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் தினமும் ட்ரெண்டாகி வருகின்றன.
சர்ப்ரைஸ் பாக்ஸ்:
சீசன் 9 ஆரம்பித்தது பிக்பாஸ் முதல் பல அதிரடி எடுத்து பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. குறிப்பாக இந்த சீசனில் திடீரென்று நடந்த டபுள் எவிக்ஷன், ஒரே வாரத்தில் நான்கு வைல்ட் கார்டு போட்டியாளர்களின் வருகை போன்றவை பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறை என கூறப்பட்டது. இதனால், இந்த சீசனுக்கு ‘சர்ப்ரைஸ் பாக்ஸ்’ என்று ரசிகர்கள் புதிய பெயரே சூட்டிவிட்டனர்.
மாஸ்க் படத்தின் புரொமோஷனுக்காக கவின்
அதோடு, பிக்பாஸ் வீட்டுக்குள் புதிய படங்களின் பிரமோஷனுக்காக நடிகர்கள் வருவது வழக்கமான விஷயமாக மாறியுள்ளது. நேற்றைய தினம், தாண்டிய எல்லோ படத்தின் புரமோஷனுக்காக பூர்ணிமா ரவி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நிலையில், இன்றைய தினம், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரும், நடிகருமான கவின் வரவிருக்கும் தன்னுடைய மாஸ்க் படத்தின் புரொமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
மிட் வீக் எவிக்ஷன்:
கவின் போட்டியாளர்களுடன் கலகலப்பாக பேசிவிட்டு, திடீரென தனது கையில் இருந்த ஒரு கார்டை எடுத்துக் காட்டினார். அது Mid-Week Eviction என தலைப்பிட்டு இருந்தது. அந்த வார்த்தையைப் பார்த்த நொடியில் போட்டியாளர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் அதிர்ந்து போனார்கள். யாருடைய முகத்திலும் நகைச்சுவை இல்லை. அனைவரும் இந்த எவிக்ஷன் யாரை வெளியேற்ற போகிறதோ என்று கலங்கிய நிலையில், இது ஒரு பிராங்க் என கூறி ஷாக் கொடுத்தார்.
எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்
எனவே மிட் வீக் எவிக்ஷன் என்கிற பெயரில் எந்த ஒரு போட்டியாளரும் வெளியேற்றப்படாத நிலையில், யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்டாகவே இந்த சம்பவம் இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தனித்துவமான கதை தேர்வால், வெற்றிப்படங்களை கொடுத்து வளர்ந்து வரும் இளம் நடிகராக மாறியுள்ளார் கவின் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.