‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’ விஜய் சேதுபதி ரோலில் நடிக்க போறது யார் தெரியுமா?
Who is Replacing Vijay Sethupathi in Idharkuthaane Aasaipattai Balakumara 2: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2' படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளது யார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா:
தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு வெளிவந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம், இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக விஜய் சேதுபதி நடித்த “சுமார் மூஞ்சி குமார்” என்ற கதாபாத்திரம், அவரின் கரியரில் ஒரு பெரிய மைல்கல்லாக அமைந்தது. ஓரளவு சீரியசான கதாபாத்திரங்களிலிருந்து விலகி, முழுக்க காமெடி மயமான வேடத்தில் அவர் விஜய் சேதுபதி நடித்து அசத்தி இருந்தார். இவரின் நடிப்புக்கு திரையரங்குகளில் பட்டாசு வெடித்ததுபோல பாராட்டுக்கள் குவிந்தது.
குமுதா… ஹேப்பி அண்ணாச்சி:
அவரின் பேசும் நெறி, நகைச்சுவை நேரம், உடல் மொழி - எல்லாமே அந்த படத்தை ரசிகர்களின் மனதில் வேறு ஒரு லெவலுக்கு கொண்டு சென்றது. குறிப்பாக “குமுதா… ஹேப்பி அண்ணாச்சி!” என்ற வசனம் சமூக வலைதளங்களில் மீம்களாக வெடித்து, மக்கள் பயன்படுத்தும் பொது சொற்றொடராகி விட்டது. இன்றுவரை எந்த மேடையிலும் விஜய் சேதுபதியிடம் அந்த வசனம் சொல்லும்படி ரசிகர்கள் குரல் கொடுப்பது அவரது நடிப்பின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
கலக்கல் ஹிட்:
இப்படத்தை இயக்கிய கோகுல், வேறு எந்த படத்துடனும் ஒப்பிட முடியாத தனித்த நகைச்சுவை ரீதியை கொண்டு வந்தவர். கதையின் ஒவ்வொரு பாத்திரத்திலும் அவர் உருவாக்கிய சில்லறை காமெடியும், சிட்சு சிட்சு சிரிக்கும் சூழல்களும் தான் படத்தை கலக்கல் ஹிட்டாக மாற்றின. எந்தக் காட்சியிலும் தேவையற்ற நீளத்தை வைத்துப் படத்தை சிக்கலாக்காமல், சாதாரண ஒரு நாளையும் கலகலப்பான அனுபவமாக மாற்றிக்காட்டினார்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2:
இந்தப் படத்துக்கு இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்பும் மக்கள் காட்டும் அன்பே, ‘பாலகுமாரா 2’ என்ற யோசனையை உருவாக்க வைத்திருக்கிறது. சமீபத்தில், இயக்குநர் கோகுல் இந்த படத்திற்கு 2-ஆம் பாகம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் பரவின. இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்கள் இடையே பெரும் ஆர்வம் ஏற்பட்டது. “முதல் பாகத்தில் போலவே கலகலப்பை மீண்டும் தரமுடியுமா?”, “எந்த கதாபாத்திரங்களை கொண்டு வரப் போகிறார்கள்?” போன்ற கேள்விகள் எழுந்தன.
சாண்டி மாஸ்டர் :
இந்த நிலையில் தான் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் இரண்டாவது பாகத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளது விஜய் சேதுபதி இல்லையாம். ஆம்... " இந்த முறை புதிய கதாபாத்திரத்தை மையமாக கொண்டு, கதை முன்னேறப் போவதாகவும், அப்படத்தில் முன்னணி வேடத்தில் சாண்டி மாஸ்டர் நடிக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது. பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியிலும், பின்னர் வந்த அவரது காமெடி நடிப்புகளின் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றவர் சாண்டி. 'லியோ' படத்தில் தளபதிக்கே சைக்கோ வில்லனாகவும் நடித்திருந்தார். மேலும் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
சர்ப்ரைஸ் இருக்குமா?
எனவே அவரின் ஸ்கிரீன் பிரசென்ஸ், எக்ஸ்பிரஷன்கள், நடனத் திறன் ஆகியவை இந்த வகை கலகலப்பான படத்திற்கு ஏற்றதாகவே இருக்கும் என்று சிலர் நம்புகின்றனர். ஆனால், இன்னும் படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. விஜய் சேதுபதி உண்மையில் இந்தப் படத்தில் இல்லையா அல்லது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.