திருமணமானவரை காதலிக்கிறாரா சமந்தா? யார் இந்த ராஜ் நிடிமோரு?
நடிகை சமந்தாவின் காதலன் என கூறப்படும் ராஜ் நிடிமோரு யார்... அவர் என்ன செய்கிறார் என்பது குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

Samantha Boyfriend Raj Nidimoru : நடிகை சமந்தா அடிக்கடி காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இவர் சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே நடிகர் சித்தார்த் மீது காதல் வயப்பட்டார். இருவரும் ஜோடியாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இவர்கள் காதல் திருமணம் வரை சென்று கடைசி நேரத்தில் முறிந்தது. சித்தார்த் உடனான காதல் முறிவுக்கு பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, தமிழ், தெலுங்கில் பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.
Samantha - Naga Chaitanya
விவாகரத்தில் முடிந்த Samantha-வின் முதல் திருமணம்
இதனிடையே நடிகர் நாக சைதன்யா மீது சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டது. இந்த காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த 2017-ம் ஆண்டு இந்த ஜோடியின் காதல் திருமணம் கோவாவில் ஜாம் ஜாம் என நடைபெற்றது. இந்த ஜோடியில் காதல் திருமண வாழ்க்கை நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு திடீரென ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தார் சமந்தா. இதையடுத்து நாக சைதன்யா கடந்த ஆண்டு நடிகை சோபிதாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
Samantha - Raj Nidimoru
மீண்டும் காதலில் விழுந்தாரா Samantha?
நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது சமந்தாவும் இரண்டாவது திருமணத்துக்கு தயாராவதாக செய்திகள் உலாவுகின்றன. இதற்கு முக்கிய காரணம் ராஜ் நிடிமோரு தான். சமீப காலமாக சமந்தாவும், ராஜும் ஜோடியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருவதால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. பிக்கில் பால் போட்டியை ராஜுடன் வந்து பார்த்த சமந்தா, அண்மையில் அவருடன் திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இதனால் தான் இவர்களது காதல் விவகாரம் காட்டுத்தீ போல் பரவ தொடங்கியது.
இதையும் படியுங்கள்... காதலன் உடன் திருப்பதிக்கு திடீர் விசிட்; 2வது திருமணத்துக்கு ரெடியாகும் சமந்தா?
Samantha - Raj Nidimoru Love Rumours
யார் இந்த Raj Nidimoru?
ராஜ் நிடிமோரு ஒரு இயக்குனர் ஆவார். இவர் பாலிவுட்டில் வெளியாகி சக்கைப்போடு போட்ட தி பேமிலி மேன் 2 என்கிற வெப் தொடரை டிகே என்பவருடன் சேர்ந்து இயக்கி இருந்தார். ராஜின் சொந்த ஊர் ஆந்திரப்பிரதேச மாநிலம் திருப்பதி தான். இவர் படித்து முடித்துவிட்டு அமெரிக்காவில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். பின்னர் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் இயக்குனராகிவிட்டார். கடைசியாக சிட்டாடெல் என்கிற வெப் தொடரை இயக்கி இருந்தார் ராஜ். இந்த இரண்டு வெப் தொடர்களிலும் சமந்தா தான் ஹீரோயினாக நடித்திருந்தார்.
Samantha Raj Photos
Raj Nidimoru - Samantha காதல்?
தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்தபோது ராஜ் நிடிமோரு உடன் நெருங்கி பழகத் தொடங்கிய சமந்தா, சிட்டாடெல் படப்பிடிப்பின் போது அவர் மீது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இயக்குனர் ராஜ் நிடிமோரு ஏற்கனவே திருமணம் ஆனவர். அவர் ஷியாமலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணமானவரையா சமந்தா காதலிக்கிறார் என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது. மே மாதம் இந்த ஜோடிக்கு திருமணம் ஆக உள்ளதாகவும் தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. எது உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... கோவில் கட்டி நடிகை சமந்தாவை கடவுளாக வழிபடும் ரசிகர்; எங்கு தெரியுமா?