MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Cinema
  • யார் இந்த திவ்யா கள்ளச்சி? யூடியூப்பில் இத்தனை லட்சம் சம்பாதிக்கிறாரா?

யார் இந்த திவ்யா கள்ளச்சி? யூடியூப்பில் இத்தனை லட்சம் சம்பாதிக்கிறாரா?

சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள திவ்யா கள்ளச்சி யூடியூப்பில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jan 30 2025, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
யார் இந்த திவ்யா கள்ளச்சி?

யார் இந்த திவ்யா கள்ளச்சி?

டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு அதன் மூலம் பேமஸ் ஆனவர் தான் திவ்யா கள்ளச்சி. டிக் டாக்கில் என்னுடைய காதலன் கார்த்தியை காணோம் என்றும் வெள்ளந்தியாக பேசி இவர் வெளியிட்ட வீடியோக்களை பார்த்த ரசிகர்கள், யாருப்பா அந்த கார்த்தி என வலைவீசி தேடி வந்தனர். ஒருகட்டத்தில் டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர் யூடியூப்பிற்கு தாவிய திவ்யா, அதிலும் கார்த்தியை தேடி அலையும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இதில் ஹைலைட் என்னவென்றால் தன்னுடைய கார்த்தியை தேடிக் கொடுக்க சொல்லி அவர் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கே சென்று அங்கு பேசி இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டிக்டாக் புகழ் திவ்யா கள்ளச்சி

டிக்டாக் புகழ் திவ்யா கள்ளச்சி

இப்படி கார்த்தி... கார்த்தி என பேசி டிரெண்டான திவ்யாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, நான் தான் அந்த கார்த்தி என சொல்லிக் கொண்டு ஒருநபர் யூடியூப்பில் வலம் வரத் தொடங்கினார். ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து கண்டண்ட்டுக்காக சில வீடியோக்களை பதிவிட தொடங்கினர். ஒருகட்டத்தில் அதுவும் சலித்துப் போனதால், டிராக்கை மாற்ற ஆசைப்பட்டு, சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கி அதன் மூலம் காசு பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார் திவ்யா கள்ளச்சி.

இதையும் படியுங்கள்... திவ்யா கள்ளச்சியின் இன்னொரு முகம்; சிறுவர்களை வைத்து... அதிர வைக்கும் பின்னணி!

35
திவ்யா கள்ளச்சி, கார்த்தி கைது

திவ்யா கள்ளச்சி, கார்த்தி கைது

திவ்யா சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சித்ரா என்பவர் ஆதாரம் வெளியிட்ட நிலையில், திவ்யா கள்ளச்சியை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் கார்த்தியை ஏவிவிட்டு திவ்யா கள்ளச்சியை சிறுவர்களை வைத்து வீடியோ எடுக்க பிளான் போட்டு கொடுத்ததே சித்ரா தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். யூடியூப்பில் இதுபோல ஒரு மாஃபியா கும்பலே இயங்கி வருவதாக கூறப்படுவதால் இன்னும் யாரெல்லாம் சிக்கப்போகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

45
திவ்யா கள்ளச்சி யூடியூப் வருமானம்

திவ்யா கள்ளச்சி யூடியூப் வருமானம்

தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கும் திவ்யா கள்ளச்சி யூடியூப் மூலம் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பது அதைவிட அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. திவ்யா கள்ளச்சி யூடியூப்பில் நான்குக்கும் மேற்பட்ட சேனல்களை வைத்திருக்கிறார். அதில் இரண்டு சேனல்களில் தான் அடிக்கடி வீடியோ பதிவிட்டு வருகிறார். அதில் வீடியோ பதிவிடுவதன் மூலம் திவ்யா கள்ளச்சிக்கு மாதம் 20 ஆயிரத்திற்கு மேல் வருமானம் வருகிறதாம்.

55
லட்சக்கணக்கில் சம்பாதித்த திவ்யா கள்ளச்சி

லட்சக்கணக்கில் சம்பாதித்த திவ்யா கள்ளச்சி

இதுமட்டுமின்றி பிற யூடியூப் சேனல்களுக்காகவும் சில வீடியோக்களில் நடித்தும் வருகிறார். அப்படி மாதத்திற்கு பிற யூடியூப் சேனல்களுக்காக 10க்கும் மேற்பட்ட வீடியோக்களில் நடித்தும் வருகிறார். அதில் ஒரு வீடியோவுக்கு 8 ஆயிரம் வரை சம்பளமாக வாங்குகிறாராம். இதன் அடிப்படையில் யூடியூப் மூலம் மட்டுமே அவருக்கு மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல் வருமானம் வருகிறதாம். இந்த வருமானத்தை மேலும் அதிகரிக்க ஆசைப்பட்டு தான் தற்போது கம்பி எண்ணி வருகிறார் திவ்யா.

இதையும் பாருங்கள்... வீடியோ : பிரபல யூ டியூபர் திவ்யா பாலியல் வழக்கில் கைது | Divya Arrested

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved