MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சர்ப்ரைஸாக 50-வது பட அறிவிப்பை வெளியிட்ட தனுஷ் - இயக்கப்போவது யார்?

சர்ப்ரைஸாக 50-வது பட அறிவிப்பை வெளியிட்ட தனுஷ் - இயக்கப்போவது யார்?

வாத்தி, கேப்டன் மில்லர் என அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷின் 50-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 19 2023, 09:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது வாத்தி திரைப்படம் தயாராகி உள்ளது. வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார் தனுஷ். வாத்தி திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

24

இதையடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தை ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி காலமானார்

34

இந்நிலையில், தனுஷின் 50-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக குறிப்பிட்டு போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் அதில் அப்படத்தை இயக்கப்போவது யார் என்கிற தகவல் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தனுஷே இந்த படத்தை இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஒருவேளை தனுஷ் இயக்கினால், அதில் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால் ஆகியோர் தனுஷுடன் நடிப்பார்கள் என்றும் அப்படத்திற்கு ராயன் என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

44

மறுபுறம் இது வட சென்னை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் பரவி வருகின்றன. இந்த மூவரின் யார் அந்த படத்தை இயக்கப்போகிறார்கள் என்பதை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கதிரவனை தொடர்ந்து... பணப்பெட்டியுடன் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஷிவின்...? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved