BiggBoss Tamil 5: அட்ரா சக்க.. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போடப்பட்ட பக்கா பிளான்! செம்ம ட்விஸ்ட்!
உலக நாயகன் கமல் ஹாசன் (Kamal hassan) தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் (Biggboss Show Anchor) என்கிற மிகப்பெரிய குழப்பம் நீடித்து வரும் நிலையில், தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் போட்டுள்ள பக்கா பிளான் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் துவங்கிய போது, அடுத்தடுத்து பல எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என பலர் போர் கொடி தூக்கினர்.
ஆனால் அவை அனைத்தையும் மிகவும் சாமர்த்தியமாக தன்னுடைய பேச்சால் சமாளித்து, சாதுர்யமாக இந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பி-க்கு வழி வகுத்தவர் நடிகர் கமல்ஹாசன் தான்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி என்றாலே, தொகுப்பாளராக இவரை தவிர பிக்பாஸ் ரசிகர்களால் யாரையும் யோசித்து கூட பார்க்க முடியாத அளவிற்கு இந்த நிகழ்ச்சியுடன் ஒன்றிணைந்து விட்டார்.
அதே போல் எவ்வளவு பிஸியான வேலைகள் இருந்தாலும், பிக்பாஸ் ஷூட்டிங்கில் தவறாமல் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ரசிகர்களும் மற்ற நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தவறினாலும் கமல் வரும் நாட்களில் தவற விடுவது இல்லை.
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த கமல்ஹாசனுக்கு லேசான இரும்பல் இருந்ததால், கொரோனா சோதனை செய்யப்பட்டது அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தற்போது சென்னையில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது உடல் நிலை சீராகி வர வேண்டும் என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரம் கமல் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதால் அவர் கலந்து கொள்வாரா? என்கிற சந்தேகமும் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்... அவருக்கு பதில் அவரது மகள் ஸ்ருதி அல்லது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது யாரும் எதிர்பாராத ஒரு தகவல், பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் இந்த வாரத்திற்காக போட்டிருக்கும் பக்கா பிளான் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கமல் ஹாசன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாலும், 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பது அவசியம் என்பதாலும், இந்த வார நிகழ்ச்சியை மருத்துவமனையில் இருந்தே தொகுத்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் வீடு முழுவதும் கேமரா வைத்து கண்காணித்து வரும் குழுவினருக்கு கமல்ஹாசன் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் கேமரா வைத்து ஷூட் செய்வது பெரிய விஷயமா என்ன? எனவே இந்த பிளானை தான் எக்சிகியூட் செய்ய உள்ளார்களாம். கண்டிப்பாக இந்த ட்விஸ்டை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.