MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 34 படமும் ஃபிளாப்.. ஐட்டம் டான்சில் விஜயகாந்துக்கு நிகராக கட்டவுட் வைத்து கொண்டாடப்பட்ட அனுராதா!

34 படமும் ஃபிளாப்.. ஐட்டம் டான்சில் விஜயகாந்துக்கு நிகராக கட்டவுட் வைத்து கொண்டாடப்பட்ட அனுராதா!

34 படத்தில் ஹீரோயினாக ஹோம்லி வேடத்தில் நடித்து விட்டு, நடிகை அனுராதா கிளாமர் நாயகியாக மாற யார் காரணம் என்பதை ஷகீலாவுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் முதல் முறையாக கூறியுள்ளார். 

4 Min read
manimegalai a
Published : Sep 12 2024, 12:19 PM IST| Updated : Sep 12 2024, 02:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Anuradha Debut 13 age

Anuradha Debut 13 age

நடிகையும், ஐட்டம் டான்சருமான அனுராதாவின் உண்மையான பெயர் (சுலோச்சனா) தன்னுடைய 13 வயதில் இயக்குனர் கே.ஜி. ஜார்ஜ் இயக்கத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். மிக சிறிய வயதிலும் அவர் மிகவும் உயரமாக இருந்ததால் அவருக்கு அனுராதா என்று இயக்குனர் பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், என மொத்தம் நான்கு மொழிகளில் கதாநாயகியாக சுமார் 34 படத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அவர் நடித்த அணைத்து படங்களுமே தோல்வியை சந்தித்தது.

28
Item Dancer Anuradha

Item Dancer Anuradha

நடிகையாகவும், ஐட்டம் டான்சராகவும் இதுவரை சுமார் 700-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள அனுராதா... சமீபத்தில் பிரபல நடிகை ஷகிலா எடுத்த பேட்டியில், கலந்து கொண்டு இதுவரை இவரை பற்றி ரசிகர்களுக்கு தெரியாது பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். "ஒரு கிளாமர் ஆர்டிஸ்ட்டாக தான் சந்தித்த பிரச்சனை குறித்து பேசிய அனுராதா.... ஹீரோயினாக, பெரிய பெரிய ஹீரோக்களுடன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் மொத்தம் 34 படங்களில் நடித்துள்ளேன். அந்த படங்கள் எதுவுமே எனக்கு கைகொடுக்காமல் போனது. நான் நடித்த அணைத்து படங்களுமே அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது, இப்படியே சென்றுகொண்டிருக்கும் போது தான் நடிகை சாந்தி வில்லியன்ஸின் கணவர், வில்லியம் சார் ஒரு படத்தை இயக்கி அதில் ஒளிப்பதிவாளர் ஆகவும் பணியாற்றினார். அந்த படத்தில் நான் ஒரு ஹீரோயின், சத்திய கலா இன்னொரு ஹீரோயினாக நடித்தார். இந்த படத்தில் ஹோட்டலில் டான்ஸ் ஆடுவது போல் ஒரு சோலோ பாடல் இருந்தது. அதாவது தன் குடும்பத்தை காப்பாற்ற அந்த பெண் ஹோட்டலில் டான்ஸ் ஆடுவது போல் அந்த கதாபாத்திரம் இருக்கும். இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து தான் தனக்கு அடுத்தடுத்து பல சோலோ பாடல்கள் மற்றும் கிளாமர் டான்ஸ் ஆட வாய்ப்புகள் குவிந்தது.

தலைமறைவான பாடகர் மனோ மகன்கள்; காரணம் என்ன?

38
Ragu Master Advice

Ragu Master Advice

என்னை தேடி ஐட்டம் டான்ஸ் வாய்ப்பு வந்தபோது, நானும் என்னுடைய அம்மாவும்... முடியவே முடியாது என கூறினோம். அந்த படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்துடன் அந்த பாடல் இருந்தது. ஆனால் சோலோவாக படத்தில் ஆடமுடியாது என கூறினேன். அந்த நேரத்தில் ரகு மாஸ்டர் தன்னை அழைத்து சில அட்வைஸ் கொடுத்தார். சினிமாவுக்கு லேடிஸ் வரக்கூடாது, அப்படி வந்து விட்டால் ஏதோ ஒரு வகையில் டாப்புக்கு போயிடனும். இதை தைரியமாக பேஸ் பண்ணுங்க... அது காமெடியா, வில்லியா அல்லது ஹீரோயின் என எதுவாக இருந்தால் என்ன? அவர் தன்னை மிகவும் ஃபோர்ஸ் பண்ணியதால்... வேறு வழி இல்லாமல் தான், சரி செஞ்சுதான் பார்ப்போமே என்று ஐட்டம் டான்ஸ் ஆட ஒப்புக்கொண்டேன்.

48
Popular Item Dancer

Popular Item Dancer

ஆரம்பத்தில் தனக்கு சங்கடமாக இருந்தாலும் அதன் பிறகு தனக்கு, ஐட்டம் டான்ஸ் மூலம் கிடைத்த பேரும் புகழும் நான் எதிர்பாராதது. அந்த சமயத்தில் தான் ரகு மாஸ்டர் சொன்னதை நினைத்து பார்த்தேன் .அதுக்கப்புறம் மிகவும் குட்டையான உடைகள் அணிந்து பல தமிழ் மற்றும் மற்ற தென்னிந்திய மொழிகளில் ஆடினேன். நான் ஒரு ஐட்டம் டான்சர் என்று ரசிகர்கள் கூறுவதை நினைத்து ஒரு நாள் கூட கவலைப்பட்டதில்லை. என்னுடைய பணியை மிகவும் சந்தோஷமாக செய்தேன். அதன் மூலம்  நிறைய பேரும் புகழும் கிடைத்தது. மதுரையில் 'சாட்சி' படத்தின் ரிலீஸின் போது, விஜயகாந்துக்கு எப்படி 30 ஆதி கட்டவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாடினார்களோ... அத போல் எனக்கும் 30 அடி கட்டவுட் வைத்தனர். எனவே எனக்கு கிளாமர் பாடல்கள் தான் மிகப்பெரிய அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற்றுக்கொடுத்ததாக கூறினார்.

'கோட் ' படத்தில் சினேகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வெங்கட் பிரபு கூறிய தகவல்!

58
34 Films Flop:

34 Films Flop:

தொடர்ந்து பேசிய இவர், 34 படங்கள் பெரிய பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த போதும் அந்த படங்கள் தோல்வி அடைந்ததால் தன்னை ராசி இல்லாத நடிகை என கூறியது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஒரு சில நடிகைகளுக்கு அவர்கள் நடிக்கும் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, அதன் மூலம் மிகவும் பிரபலமாகின்றனர். ஆனால் நான் நடித்த 34 படங்களுக்கும் எனக்குள் இந்த படமாவது வெற்றி பெறாதா? என்கிற எதிர்பார்ப்பு இருந்து கொண்டு தான் இருந்தது என தன்னுடைய மன குமுறலை கொட்டியுள்ளார் .

68
Anuradha Item dance in Tamil movies

Anuradha Item dance in Tamil movies

அதே சமயம் என்னை ராசி இல்லாத நடிகை என்று கூறிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சிலர், என்னுடைய ஐட்டம் டான்ஸ் திரைப்படத்தில் இருக்க வேண்டும் என, படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் கூட, தன்னுடைய பாடலை தனியாக ஷூட் செய்து... சென்சாருக்கு அனுப்பி படத்துடன் இணைத்து வெளியிட்டுள்ளனர். என்னுடைய பாடல் இருந்தால் தான் ரசிகர்கள் திரையரங்குக்கு வருவார்கள் என்று இயக்குனர்கள் எண்ணிய காலங்கள் என்னுடைய தோல்வி வலியை மறக்க செய்தது.

சத்தமில்லாமல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வெள்ள நிவாரணத்திற்கு நிதியை அள்ளி கொடுத்த சிம்பு!
 

78
Anuradha About Silk Smita

Anuradha About Silk Smita

24 மணிநேரம் படத்தில் சீனியர் கிளாமர் டான்சரான, ஜெயமாலினி மற்றும் ஜோதிலட்சுமியுங் டான்ஸ் ஆடிய தன்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்ட அனுராதா, சில்க் ஸ்மிதா கடைசியாக தனக்கு போன் செய்து, பார்க்க வர சொன்னபோது.. என்னால் போக முடியாமல் போனது ஒரு வேலை நான் அவரை பார்க்க சென்றிருந்தால், அவர் இன்று உயிருடன் இருந்திருப்பாரோ என்கிற மன வேதனை என் நெஞ்சத்தில் இருந்து நீங்காமல் உள்ளதாகவும் கூறி இருந்தார். 

88
Dancer Anuradha

Dancer Anuradha

நடிகை அனுராதா கிளாமர் டான்சர் மட்டும் இன்றி, பல தற்காப்பு கலை பயிற்சி பெற்றவர்.  எந்தவித டூப்பும் இல்லாமல் அதிரடி வேடங்களில் நடித்துள்ளார். ஜாவா, என்ஃபீல்டு புல்லட் மற்றும் பிற மோட்டார் சைக்கிள்களை அந்த காலத்திலேயே ஓட்டி முன்னணி ஹீரோக்களையே அதிர வைத்தவர். திரைப்படங்கள் மட்டும் இன்றி தங்கம், கண்ணன கண்ணே, முத்தரசன், தெய்வமகள், உள்ளிட்ட சில சன் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவியின் முகத்திரையை கிழித்த ஆர்த்தி; ஆர்த்தியின் கடிதத்தில் புதைந்து இருக்கும் மர்மங்கள்!!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சில்க் ஸ்மிதா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved