MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்ற டீம்: தளபதி67ல் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?

கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்ற டீம்: தளபதி67ல் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?

மன்சூர் அலிகான் மற்றும் மிஷ்கின் ஆகியோர் பலரும் தளபதி67 படத்தில் நடிக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 31 2023, 09:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
தளபதி67

தளபதி67

வாரிசு படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து விஜய், தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ள தளபதி67 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இரண்டாவது முறையாக இணைந்துள்ள 'தளபதி67' படம் குறித்து நேற்று, இந்த படத்தில் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிக்கை வெளியிட்டு தெரிவித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

இதில் மூன்றாவது முறையாக தளபதி விஜய்யுடன் இணைவது மிகவும் மகிழ்ச்சி என்றும், படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதன்படி சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

38
சஞ்சய் தத்

சஞ்சய் தத்

இதுகுறித்த அறிவிப்பு போஸ்டரில், தளபதி 67 கதை கேட்டு சஞ்சய் தத் என்ன சொன்னார் என்பதை பதிவிட்டுள்ளனர். அதன்படி “தளபதி 67 படத்தின் ஒன் லைன் கேட்டதுமே இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். இந்த பயணத்தை தொடங்க ஆவலோடு உள்ளேன்” என்று சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

48
பிரியா ஆனந்த்

பிரியா ஆனந்த்

தளபதி67 படத்தில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி. நம்பமுடியாத நடிகர் மற்றும் நடிகைகளுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக மிர்ச்சி சிவா, சிவகார்த்திகேயன், விமல், கௌதம் கார்த்திக் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த பிரியா ஆனந்த் முதல் முறையாக தளபதி விஜய் இணைந்து தளபதி67 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

58
சாண்டி மாஸ்டர்

சாண்டி மாஸ்டர்

இந்தப் படத்தில் என்னவொரு ஆச்சரியமான விஷயம் என்றால், சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இதுவரையில், ஒரு சில படங்களில் மட்டும் நடித்து, பாடல்களுக்கு நடனம் அமைத்துக் கொண்டிருந்த சாண்டி மாஸ்டர் தளபதி67 படத்தில் இணைந்துள்ளார். எனக்கு நானே என்னை ஒரு நடிகராக பார்ப்பது எல்லாம் புதுசு. நான் எவ்வளவு வியப்பாக இருக்கிறேன் என்று வெறும் வார்த்தையால் விவரிக்க முடியாது என்று சாண்டி மாஸ்டர் தெரிவித்துள்ளார். 
 

68
மிஷ்கின்

மிஷ்கின்

யூத் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து பணியாற்றுகிறேன். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. அப்போது எப்படி அண்ணா என்று அழைத்தாரோ அதே போன்று தான் இப்போதும் அழைக்கிறார். இந்த உடம்பை வைத்தே அவருடன் சண்டைக் காட்சியில் நடித்திருக்கிறேன். வாய் எல்லாவற்றையும் அடித்து உடைத்துவிட்டார். இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் எந்தவித பதற்றமும் இல்லாமல் படத்தை தெளிவாக இயக்குகிறார். ஒவ்வொரு காட்சியையும் நுட்பமாக எடுத்துக் கொடுக்கிறார். தளபதி67 படத்தின் மூலமாக உங்கள் அனைவரையும் திரையரங்கில் சந்திக்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
 

78
மன்சூர் அலி கான்

மன்சூர் அலி கான்

மின்சார கண்ணா, நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன், தேவா மற்றும் வசந்த வாசல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மன்சூர் அலி கான் இந்தப் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: யாணும் இணைந்தேன், தளபதி67ல் லோகேஷ் நீ ஆர்ப்பரித்தெழு திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே என்று பதிவிட்டுள்ளார்.
 

88
மேத்யூ தாமஸ்

மேத்யூ தாமஸ்

மேத்யூ தாமஸ் கூறியிருப்பதாவது: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் படத்தில் நடிக்கிறேன். இதைவிட ஒரு சிறந்த அறிமுக தமிழ் படத்தை கேட்டிருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved