MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Songs: இசைஞானிக்கு பிடித்த அந்த ஒரு பாடல்.! கண்ணதாசன் பாட்டை திரும்ப திரும்ப கேட்கும் இசைஞானி.! என்ன பாட்டு தெரியுமா?!

Songs: இசைஞானிக்கு பிடித்த அந்த ஒரு பாடல்.! கண்ணதாசன் பாட்டை திரும்ப திரும்ப கேட்கும் இசைஞானி.! என்ன பாட்டு தெரியுமா?!

'இசைஞானி' இளையராஜா எப்போதும் ரசித்து மகிழ்ந்த அந்த பாடலை கேட்டால் நீங்களும் மயங்கி போவீர்கள். கண்ணதாசன் எழுதிய அந்த பாடலின் சுவாரஸ்யம் உங்களையும் மெய்மறக்க வைக்கும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
| Updated : Aug 24 2026, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
15 வயதில் மனதை பறி கொடுத்த இளையராஜா.!
Image Credit : Facebook

15 வயதில் மனதை பறி கொடுத்த இளையராஜா.!

தமிழ் சினிமாவின் 'இசைஞானி' என்று போற்றப்படும் இளையராஜா, தனது இசையால் பல சாதனைகளை நிகழ்த்தியவர். இருப்பினும், அவரே வியந்து பாராட்டும் அளவுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் கவிஞர் கண்ணதாசன் கூட்டணியில் வெளியான ஒரு பாடல் அவர் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ளது. அது குறித்த சுவாரசியமான தகவல்கள் இங்கே

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அந்த மாலைப் பொழுது தந்த மயக்கம்.!
Image Credit : Facebook

அந்த மாலைப் பொழுது தந்த மயக்கம்.!

சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வரும் ஒரு பழைய வீடியோவில், எம்.எஸ்.வி, டி.கே. ராமமூர்த்தி மற்றும் பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்ற ஜாம்பவான்கள் பங்கேற்ற மேடையில் இளையராஜா தனது நெகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். அந்த மேடையில் எம்.எஸ்.வி ஒரு பாடலைப் பாடி முடித்ததும், "இது இளையராஜாவுக்கு ரொம்பப் பிடித்த பாட்டு" என்று கூற, நெகிழ்ந்து போன இளையராஜா, எம்.எஸ்.வியின் காலில் விழுந்து ஆசி பெற்று அவரைக் கட்டித் தழுவிக்கொண்டார்.

Related Articles

Related image1
Ilayaraja Music: அப்பாடி! "செந்தாழம் பூவில்" பாடலுக்குப் பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
Related image2
Music: இளமையெனும் பூங்காற்று பாடலில் இவ்வளவு அதிசயங்கள் இருக்கா.! இளையராஜா புதைத்து வைத்த இசை ரகசியம் இதுதான்.!
35
பண்ணைப்புரத்து நினைவுகள்.!
Image Credit : Facebook

பண்ணைப்புரத்து நினைவுகள்.!

அந்தப் பாடல் 1961-ல் வெளியான 'பாக்கியலட்சுமி' திரைப்படத்தில் இடம்பெற்ற "மாலை பொழுதின் மயக்கத்திலே..." என்பதாகும். இது குறித்துப் பேசிய இளையராஜா, "எனக்கு அப்போது 15 முதல் 17 வயது இருக்கும். பண்ணைப்புரத்திலிருந்து கோம்பைக்கு நடந்து செல்லும் வழியில் வானொலியில் இந்தப் பாடல் ஒலிக்கும். அந்த வயதிலேயே இந்தப் பாடல் என்னை அத்தனை பாதித்தது" என்று நினைவுகூர்ந்தார்.

45
கண்ணதாசனின் வரிகளும் எம்.எஸ்.வியின் இசையும்
Image Credit : Facebook

கண்ணதாசனின் வரிகளும் எம்.எஸ்.வியின் இசையும்

இந்தப்பாடலில் தன்னை மிகவும் கவர்ந்த விஷயமாக இளையராஜா குறிப்பிடுவது கவிஞர் கண்ணதாசனின் வரிகள் மற்றும் அதற்கு எம்.எஸ்.வி கொடுத்த உயிர். குறிப்பாக, "இளமையெல்லாம் வெறும் கனவுமயம் இதில் மறைந்தது சில காலம்... தெளிவும் அறியாது முடிவும் புரியாது மயங்குது எதிர்காலம்..." என்ற வரிகள் சமூகத்தில் உள்ள அனைவருக்குமே பொருந்தக்கூடிய ஒரு தத்துவத்தைக் கொண்டிருப்பதாக அவர் புகழ்ந்துள்ளார். "மாலை பொழுதின் மயக்கத்தை அந்த இசைச் சுரங்களைக் கொண்டு அப்படியே கொண்டு வந்திருப்பார் அண்ணன் எம்.எஸ்.வி" என்று இசை நுணுக்கத்தைப் பாராட்டியுள்ளார்.

55
இதுதான் உண்மையான இசை, இதுதான் உண்மையான பாடல்
Image Credit : Facebook

இதுதான் உண்மையான இசை, இதுதான் உண்மையான பாடல்

ஒரு சிறந்த படைப்பு என்பது காலங்களைக் கடந்து நிற்கும் என்பதற்கு இந்தப் பாடலே சாட்சி. தனக்கு தற்போதும், தான் 15 வயதில் கேட்ட அந்தப் பாடலை அதே சிலிர்ப்புடன் இளையராஜா விவரிப்பது, எம்.எஸ்.வி - கண்ணதாசன் கூட்டணியின் மேதமைக்குச் சான்றாக அமைகிறது. "இதுதான் உண்மையான இசை, இதுதான் உண்மையான பாடல்" என்று இளையராஜா கூறிய வார்த்தைகள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
இசை
இளையராஜா
இளையராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Common Man : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் முனியம்மாவுக்கு செக் வைத்த டீம்! ஷாப்பிங் டாஸ்க்கில் வெடித்த சர்ச்சை
Recommended image2
Theatre and OTT Releases : டாக்ஸிக் vs ஹாய்... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங்
Recommended image3
KudikaraNenju: துருவ் விக்ரம் குரலில் ‘குடிகார நெஞ்சு’.. ‘ஹாய்’ படத்திற்கு ஏறும் ஹைப்
Related Stories
Recommended image1
Ilayaraja Music: அப்பாடி! "செந்தாழம் பூவில்" பாடலுக்குப் பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
Recommended image2
Music: இளமையெனும் பூங்காற்று பாடலில் இவ்வளவு அதிசயங்கள் இருக்கா.! இளையராஜா புதைத்து வைத்த இசை ரகசியம் இதுதான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved