டிஸ்கோ சாந்தியின் மறுபக்கம்: குடிப்பழக்கத்திற்கு அடிமையாக காரணம் என்ன?
80ஸ் மற்றும் 90ஸ் கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தி, கணவர் ஸ்ரீஹரியின் மறைவிற்குப் பிறகு போதைப் பழக்கத்திற்கு அடிமையானார். இந்தக் கடினமான காலகட்டத்திலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார், இப்போது என்ன செய்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
டிஸ்கோ சாந்தி - Disco Shanthi
டிஸ்கோ டான்ஸ் பற்றி எதுவும் தெரியாமல் டிஸ்கோ பாடல்களுக்கு நடனம் ஆடி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் 80ஸ் மற்றும் 90ஸ் நடிகை டிஸ்கோ சாந்தி. இவருடைய கணவர் ஸ்ரீஹரி மறைவிற்கு பிறகு போதைப் பழக்கத்திற்கு அடிமையான டிஸ்கோ சாந்தி அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பார்க்கலாம் வாங்க.
Disco Shanthi Tamil Films
கடந்த 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. நடிப்பின் மீது ஆசையும், ஆர்வமும் இல்லாமல் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் காரணமாக நடிகையானவர் டிஸ்கோ சாந்தி. இவர், மறைந்த நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள் ஆவார்.
Disco Shanthi Tamil Films
வெள்ளை மனசு, உதயகீதம், சாவி, கெட்டி மேளம், காட்டுக்குள்ளே திருவிழா, சிதம்பர ரகசியம், ராஜ மரியாதை, ஊமை விழிகள், உரிமை கீதம், ராசாவே உன்னை நம்பி, தர்மத்தின் தலைவன், நாளைய மனிதன், வெற்றி விழா, வாய்க் கொழுப்பு, நீ பாதி நான் பாதி, அமரன், சின்னவர், பரதன், முத்துகாளை, ராஜா எங்க ராஜா, இரட்டை ரோகா என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
Disco Shanthi Tamil Movies
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஒடியா என்று கிட்டத்தட்ட 900க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவரது உண்மையான பெயர் சாந்தகுமாரி. நடிகையாக அறிமுகமாவதற்கு முன் டான்ஸ் கற்றுக் கொண்டிருந்தார். அப்போது தான் காதுல பூ படத்திற்காக கவர்ச்சி டான்ஸ் ஆடுவதற்கு அழைக்கப்பட்டார். நடிப்பதற்கு விருப்பமும், ஆர்வமும் இல்லையென்றாலும் தேடி வரும் வாய்ப்பை விடக் கூடாது என்பதற்காக நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார்.
Disco Shanthi
டிஸ்கோ சாந்தி தனது கவர்ச்சி நடனத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தார். எனினும் போதுமான வாய்ப்புகள் இல்லாத நிலையில் சிக்காக்கோவில் சிதறிய ரத்தம் என்ற மலையாளப் படத்தின் மூலமாக ஹீரோயினாக நடித்தார். முதலில் டிஸ்கோ பற்றி எதுவும் தெரியாத நிலையில் நாளடைவில் டிஸ்கோ மற்றும் பரதம் கற்றுக் கொண்டார்.
Disco Shanthi
அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். சில்க் சுமிதாவிற்கு அடுத்தபடியாக தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டார். கடந்த 1996 ஆம் ஆண்டு ஸ்ரீஹரியை காதல் திருமணம் செய்து கொண்டார். டிஸ்கோ சாந்தியின் டான்ஸைப் பார்த்து அவரை காதலிக்க ஆரம்பித்தார். திருமணத்திற்கு பிறகு குடும்பம், மகன், மகள் என்று வந்த உடன் சினிமாவிலிருந்து விலகினார். ஒரு கட்டத்தில் ஸ்ரீஹரி மறைவிற்கு பிறகு அவரை நினைத்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால், அவர் இழந்தது ஏராளம்.
Actress Disco Shanthi
இந்த நிலையில் தான் போதைப் பழக்கத்திலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார், அதற்காக அவர் என்ன செய்தார், இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தொடர்ந்து பார்ப்போம். ஸ்ரீஹரி இறந்த பிறகு நான் குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன். நான் என்னை மறக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்தேன். மேலும், கணவர் இறந்த பிறகு நான் அவரத் படுக்கையறைக்கு செல்லவில்லை. 3 மாதங்களுக்கு பிறகு தான் அவர்களது படுக்கறைக்கு சென்றுள்ளார். எனது சகோதரர்களும், அவர்களது குடும்பத்தினரும் கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்தனர்.
Disco Shanthi
குழந்தைகளின் படிப்பு காரண்மாக அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றனர். அதன் பிறகு என்னுடைய மகன்கள் தான் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக மதுப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்தேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். நல்ல கதை அமைந்தால் மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.