இனிமேல் இப்படியெல்லாம் செய்தால் நடவடிக்கை எடுக்கபடும்! விஜேவுமான ரம்யா எச்சரிக்கை!
விஜய் டிவி பிரபலமான விஜே ரம்யா எச்சரிக்கும் விதத்தில் போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ரம்யா சுப்பிரமணியன்:
தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்தவர் நடிகையும் விஜேவுமான ரம்யா சுப்பிரமணியன். மொழி படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான ரம்யா சுப்பிரமணியனுக்கு மங்காத்தா படம் நல்ல வரவேற்பு கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி அவர் நடித்து வெளியான படங்கள் தான் ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், கேம் ஓவர், ஆடை, மாஸ்டர், சங்கத்தலைவன், ரசவாதி என்று பல படங்களில் நடித்த ரம்யா சுப்பிரமணியன் கடைசியாக அஜித் நடித்து வெளியான விடாமுயற்சி படத்தில் நடித்தார்.
Vijay tv Anchor
விஜய் டிவி தொகுப்பாளர்
நடிகையும் தாண்டி விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். குயீன் கிங் ஜாக், கலக்க போவது யாரு? நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் என்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார்.
AI Photos
AI மூலம் மாற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள்:
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா சுப்பிரமணியன் அடிக்கடி ரீல்ஸ் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தான் ஏஐ மூலமாக அவரது புகைப்படங்கள், வீடியோக்களை மாற்றி பதிவிட்டு வருபவர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
Ramya Warning:
எச்சரிக்கை:
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது: ஏஐ தொழில்நுட்பம் மூலமாக தனது வீடியோவை முறைகேடாக வெளியிடுபவர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இனிமேலும் இது தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையாக வார்னிங் கொடுத்துள்ளார்.