கிரேஸி கண்மணியை ஞாபகம் இருக்கா.. சிங்கப்பூரில் குழந்தையுடன் ஜாலி ட்ரிப் சென்ற தியா மேனனின் கியூட் கிளிக்ஸ் இதோ
விஜே தியா மேனன் சிங்கப்பூரில் தனது குடும்பத்துடன் ஜாலியாக சுற்றுலா சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
diya menon
கேரளாவில் பிறந்தவர் தியா மேனன். பள்ளிப்படிப்பை கேரளாவில் முடித்த இவர், கல்லூரியில் படிப்பதற்காக தமிழகம் வந்தார். கோயம்புத்தூரில் கல்லூரி படிப்பை முடித்த தியா மேனன் கடந்த 2015-ம் ஆண்டு மீடியாவுக்குள் நுழைந்தார். சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக களமிறங்கிய இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
diya menon
குறிப்பாக இவர் தொகுத்து வழங்கிய கிரேஸி கண்மணி நிகழ்ச்சி அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. ரசிகர்கள் மத்தியிலும் கிரேஸி கண்மணியாக பேமஸ் ஆன தியா மேனன், சன் டிவியில் வணக்கம் தமிழா, சவாலே சமாளி, சூப்பர் சேலஞ் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
diya menon
கடந்த 2016-ம் ஆண்டு கார்த்திக் சுப்ரமணியம் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார் தியா. கார்த்திக் சுப்ரமணியம் சிங்கப்பூர் சிட்டிசன் ஆவார். அதுமட்டுமின்றி அங்கு மாநில அளவிலான கிரிக்கெட் வீரராகவும் கார்த்திக் இருந்துள்ளார். சுமார் 3 ஆண்டுகள் காதலித்து தியாவை கரம்பிடித்துள்ளார் கார்த்திக்.
இதையும் படியுங்கள்... நீச்சல் உடையில் நஸ்ரியா... பகத் பாசில் மனைவியின் புகைப்படங்களை வைரலாக்கும் ‘ரத்னவேலு’ ஃபேன்ஸ்
diya menon
திருமணம் முடிந்ததும் தியா மேனனும் சிங்கப்பூருக்கு குடியேறிவிட்டார். தற்போது அங்கு குடியுறிமையும் பெற்றுவிட்டார். தியா மேனன் - கார்த்திக் தம்பதிக்கு கடந்தாண்டு பெண் குழந்தை பிறந்தது. திருமணமாகி ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் அவருக்கு பிறந்த முதல் குழந்தை இதுவாகும். இந்த குழந்தைக்கு கியாரா என பெயரிட்டுள்ளனர்.
diya menon
சிங்கப்பூரில் குடியேறிய பின்னர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவான நடிகை தியா மேனன், அதில் அடிக்கடி புகைப்படங்களையும் பதிவிடுவார். அந்த வகையில் அண்மையில் குடும்பத்தோடு சிங்கப்பூரில் சுற்றுலா சென்றிருந்த அவர், அப்போது தன் பேமிலியோடு எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் டிரைலருக்கு போட்டியாக... பிரபுதேவாவின் பான் இந்தியா படமான வுல்ஃப் டீசர் வெளியீடு - மிரட்டலா இருக்கே!