நீச்சல் உடையில் நஸ்ரியா... பகத் பாசில் மனைவியின் புகைப்படங்களை வைரலாக்கும் ‘ரத்னவேலு’ ஃபேன்ஸ்
மாமன்னன் பட நடிகர் பகத் பாசிலின் மனைவி நஸ்ரியா இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கு அவர் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பகத் பாசில். இவருக்கு தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் நடித்து வருகிறா பகத் பாசில். அது ஒருபுறம் இருக்க, தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டிங் ஸ்டார் ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் பகத் பாசில். இதற்கு காரணம் அவர் வில்லனாக நடித்த மாமன்னன் படம் தான்.
பகத் பாசிலின் ரத்னவேலு கேரக்டரை கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள் தற்போது ஒருபடி மேலே போய் அவரது மனைவி நஸ்ரியாவிடம் ஆஜராகி இருக்கின்றனர். பகத் பாசிலின் மனைவி நஸ்ரியா விடுமுறைக்காக இலங்கைக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு நீச்சல் உடை அணிந்தபடி கடற்கரையோரம் அமர்ந்து சில கேண்டிட் புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு இருந்தார்.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் டிரைலருக்கு போட்டியாக... பிரபுதேவாவின் பான் இந்தியா படமான வுல்ஃப் டீசர் வெளியீடு - மிரட்டலா இருக்கே!
இதைப்பார்த்ததும் ஓடோடி வந்த ரத்னவேலு பகத் பாசில் ரசிகர்கள், நஸ்ரியாவின் புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர். அந்த புகைப்படம் பதிவிட்ட 18 மணிநேரத்திற்குள் 6 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை பெற்றுள்ளது. இதுதவிர கமெண்ட் செக்ஷனிலும், அகில இந்திய ரத்னவேல் மனைவி மக்கள் பாசறை என்றெல்லாம் பதிவிட்டு அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.
நடிகர் பகத் பாசிலும், நடிகை நஸ்ரியாவும் கடந்த 2014-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா, பின்னர் டிரான்ஸ் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். கடந்த ஆண்டு தெலுங்கில் நானிக்கு ஜோடியாக அடடே சுந்தரா என்கிற படத்திலும் நடித்திருந்தார்.
தமிழில் ராஜா ராணி படம் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த நஸ்ரியா, அதன்பின் நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா ஆகிய படங்களுக்கு பின் நடிக்கவே இல்லை. இந்த நிலையில், தற்போது அவர் ஒரு வெப் தொடர் மூலம் தமிழில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெப் தொடரில் சாந்தனு நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... 10 தடவ கருக்கலைப்பு.. பிள்ளைகளுக்காக விபச்சார தொழில் செய்தேன்! பகீர் கிளப்பிய ரெளடி பேபி சூர்யா