10 தடவ கருக்கலைப்பு.. பிள்ளைகளுக்காக விபச்சார தொழில் செய்தேன்! பகீர் கிளப்பிய ரெளடி பேபி சூர்யா
சமூக வலைதளங்கள் மூலம் பேமஸ் ஆன ரெளடி பேபி சூர்யா, தான் விபச்சார தொழிலில் ஈடுபட்டது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
டிக்டாக் மூலம் பிரபலமானவர் ரெளடி பேபி சூர்யா. சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இவர், தன் சொந்த வாழ்க்கையில், தான் சந்தித்த கஷ்டங்கள் குறித்து மனம்திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது : “எனக்கு பெற்றோர் வைத்த பெயர் சுப்புலட்சுமி. நான் ஜாதகத்தின் மீது நம்பிக்கை உள்ளவள் என்பதால் எனது பெயரை சூர்யா என மாற்றிக்கொண்டேன். என் தந்தை எனக்கு 3 வயது இருக்கும்போதே இறந்துவிட்டார். 15 வயதிலேயே என்னுடைய தாய் மாமா பையனை காதலிச்சேன். அந்த காதல் தோல்வியில் முடிந்தது.
பின்னர் என்னை மாற்றுத்திறனாளி ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முயன்றார்கள். அந்த சமயத்தில் திருமணத்தில் விருப்பம் இல்லாததால் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றேன். ஆனால் என்னுடைய அண்ணன்மார்கள் வந்து காப்பாற்றிவிட்டனர். பின்னர் வழுக்கட்டாயமாக எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அப்போது ஆறு மாதங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் மருத்துவரிடம் சென்று கேட்டபோது அவர் என்னுடைய கணவருக்கு குழந்தை பிறக்காது என சொல்லிவிட்டார்.
பின்னர் அவரை பிரிந்து என்னுடைய வீட்டிற்கே வந்துவிட்டேன். குடும்பமே என்னை ஒதுக்க ஆரம்பித்ததால் குடிக்க ஆரம்பித்தேன். திருப்பூரில் வேலைக்கு சென்றபோது தான் பாலாவை சந்தித்தேன். இருவரும் கல்யாணம் செய்துகொள்ளமலே ஒன்றாக வாழ்ந்தோம். அப்போது எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குடும்பத்தில் இதுகுறித்து சொன்னோம், அவர்கள் எதிர்த்தனர். ஒரு கட்டத்தில் என் அம்மா மட்டும் என்னுடன் வந்துவிட்டார்.
இதையும் படியுங்கள்... இது படமில்லை... மாமன்னன் பார்த்துட்டு சிவகுமார் அனுப்பிய மெசேஜ் பார்த்து மனம் உருகிய மாரி செல்வராஜ்
அதன்பின்னர் 10 முறை நான் கர்ப்பமானேன். ஆனால் சூழ்நிலை கருதி அவற்றையெல்லாம் கலத்துவிட்டோம். இதையடுத்து தான் என்னுடைய 2-வது மகன் பிறந்தான். என் கணவர் பாலாவை நல்லவர் என நினைத்து தான் அவருடன் திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்து வந்தேன். அவன் ஒரு குடிகாரன் என்பதே பின்னர் தான் தெரியும். நான் அந்த சமயத்தில் ஒயின் மட்டும் குடிப்பேன். ஆனால் அவன் வேலைக்கே செல்லாமல் குடிக்கு அடிமையாகிவிட்டேன். கணவனும் சம்பாதிக்கவில்லை. பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக தான் விபச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்தேன்.
ஒரு சிலரெல்லாம் இரக்கமே படமாட்டார்கள். சிலரெல்லாம் என்னை ஐட்டம் என அழைப்பார்கள். அந்த வார்த்தை எவ்வளவு வலியை கொடுக்கும் என எனக்கு தெரியும். இன்றுவரை நான் என்னுடைய கணவரை திருமணம் செய்துகொள்ளவே இல்லை. ஆனால் சட்ட ரீதியா அவர் தான் என்னுடைய கணவர் என ஐடி எல்லாம் வச்சிருக்கேன். என்னை விபச்சாரத்தில் தள்ளியதே என் கணவன் தான்” என சோகங்கள் நிறைந்த தன் வாழ்க்கையை பற்றி பேசி இருக்கிறார் சூர்யா.
இதையும் படியுங்கள்... நடிகர் மாரிமுத்து மீது குவியும் புகார்கள்.... எதிர்நீச்சல் தொடருக்கு சிக்கல் வருமா?