MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Thalapathy 66 Update : தளபதி 66 படத்தின் மாஸ் அப்டேட் வந்தாச்சு... விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்

Thalapathy 66 Update : தளபதி 66 படத்தின் மாஸ் அப்டேட் வந்தாச்சு... விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்

Thalapathy 66 Update : தளபதி 66 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. 

2 Min read
Author : Ganesh A
Published : Mar 10 2022, 08:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பீஸ்ட் ரெடி

கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் (Beast) என்கிற படம் தயாராகி உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

விரைவில் தளபதி 66 

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி விஜய்யின் 66-வது படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா (Thozha) படத்தை இயக்கி உள்ளார். தில் ராஜு இப்படத்தை தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராக உள்ளது. நடிகர் விஜய் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுவாகும்.

35

தீபாவளிக்கு வெளியிட திட்டம்

தளபதி 66 (Thalapathy 66) படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர். திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்தால் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு இப்படம் ரிலீசாகும் என்றும், ஒருவேளை கொரோனா காரணமாக படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டால் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

45

விஜய்க்கு ஜோடி ராஷ்மிகா

தளபதி 66 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இப்படத்தில் விஜய்யுடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

 

55

வில்லன் அப்டேட்

இந்நிலையில், தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் முன்னதாக அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Etharkkum Thunindhavan : எதற்கும் துணிந்தவன் எப்படி இருக்கு? ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாரா சூர்யா! Twitter விமர்சனம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth Success: 'உனக்கெல்லாம் கார் கிடையாது... நடந்து போ'னு சொன்ன தயாரிப்பாளர்! பதிலுக்கு ரஜினி செய்த தக் லைஃப் சம்பவம்
Recommended image2
Samantha : அந்த ஒரு சம்பவத்துக்கு அப்புறம் சினிமாவே வேணாம்னு நினைச்சேன் - சமந்தா சொன்ன ஷாக் தகவல்
Recommended image3
Chandramukhi : சந்திரமுகி படத்துக்கு ஜோதிகா முதல் சாய்ஸ் இல்லையாம்... 3 நாள் ஷூட்டிங்கிற்குப் பின் சிம்ரன் ஏன் விலகினார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved