விவாகரத்துக்கு பின்... ஒரே ஹீரோவை வைத்து போட்டி போட்டு படம் இயக்கும் தனுஷ் - ஐஸ்வர்யா..!
விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா படம் இயக்குவதில் பிசியாக இறங்கிய நிலையில், தற்போது அவருக்கு போட்டியாக தனுஷும் இயக்குனராக களமிறங்கி உள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், வாத்தி படம் மூலம் தெலுங்கிலும் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 17-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இப்படம் தமிழில் வாத்தி என்கிற பெயரிலும், தெலுங்கில் சார் என்கிற பெயரிலும் ரிலீசாக உள்ளது.
இதுதவிர அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடித்து முடித்த பின்னர் தனுஷ் படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம்.
ஏற்கனவே பவர் பாண்டி படத்தை இயக்கியுள்ளார் தனுஷ். இப்படம் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீசாகி இருந்தது. அதன்பின் நாகார்ஜுனா, அதிதி ராவ் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட் படமொன்றை இயக்கி வந்தார். ஆனால் அப்படம் சில பிரச்சனைகளால் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த தனுஷ், தற்போது மீண்டும் இயக்குனராக கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... Aathmika Photos: கொசுவலை போன்ற சேலையில் செம்ம ஹாட்டாக கவர்ச்சி காட்டும் ஆத்மிகா..! அசைந்து போன ரசிகர்கள்..!
அதன்படி அவர் இயக்க உள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அப்படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் எஸ்.ஜே.சூர்யாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவல் தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
தனுஷை விவாகரத்து செய்த பின் ஐஸ்வர்யாவும் தற்போது படம் இயக்குவதில் பிசியாக இறங்கி உள்ளார். அவர் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இதில் ரஜினி கெஸ்ட் ரோலிலும் நடிக்கிறார். இந்த நிலையில் தனுஷும் அவருக்கு போட்டியாக களமிறங்கி உள்ளது தான் கோலிவுட்டை பரபரப்பாக்கி உள்ளது. இதில் சுவாரஸ்யமான ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் இயக்கும் படங்களில் ஹீரோவாக நடிக்க உள்ளது விஷ்ணு விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நாட்டாமை பட டீச்சர் போல் மாறி... சேலையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய சாக்ஷி அகர்வால் - வைரலாகும் போட்டோஸ்