விஷால் திருமணம் நிற்க இவருடன் இருந்த தொடர்பு தான் காரணமா? கொளுத்தி போட்ட பிரபலம்..!
நடிகர் விஷால், அனிஷா என்கிற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திடீர் என அந்த பேச்சு அடியோடு நின்றது. எனவே இந்த திருமணம் நின்று விட்டதாகவே கூறப்டுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பிரபலம் ஒருவர் கொளுத்தி போட்ட தகவல் தீயாக பரவிவருகிறது.
விஷாலுக்கும் - அனிஷாவிற்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
ஆனால் திடீர் என அனிஷா, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து நிச்சயதார்த்த புகைப்பங்களை நீக்கியதால், விஷால் திருமணம் நின்று விட்டதாக பல செய்திகள் தொடர்ந்து வந்தது.
இதை தொடர்ந்து அனிஷா - விஷால் இடையே இருந்த கருது வேறுபாடு பிரச்சனைகள் முடிவிற்கு வந்தது. அனிஷா விஷால் கிடைக்க நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என தெரிவித்து காதலை தொடர்ந்தார் விஷால்.
ஆனால் தற்போது இவர்களுடைய, திருமணம் குறித்து எந்த ஒரு செய்திகளும் வெளியாகவில்லை. நடிகர் சங்கம் கட்டிட வேலைகளும் ஒரு சில பிரச்சனைகளால் அப்படியே நிற்கிறது.
பட விழாவில் கலந்து கொண்ட விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி... நீதிமன்றத்தில் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள நடிகர் சங்க ஓட்டு என்னும் பணி விரைவில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டு வாக்குகள் எண்ணி முடிக்கப்படும். அதில் விஷாலின் அணி வெற்றி பெற்றதும், விரைவிலேயே கட்டிடம் முடிக்கப்பட்டு அதில் தான் விஷாலின் திருமணம் நடைபெறும் என கூறியுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, தற்போது பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் புதிய தீ ஒன்றை கொளுத்தி போட்டுள்ளார்.
அதாவது, விஷாலுக்கு திருமணம் நின்று போக காரணம், லட்சுமி மேனனுடன் இருந்த தொடர்பு தான் என்று தெரிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஏற்கனவே விஷால் மற்றும் லட்சுமி மேனன் இருவரும் காதலித்தாக ஒரு சில தகவல் கோலிவுட் திரையுலகத்தில் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.