- Home
- Cinema
- Vishal: 82 வயதிலும் விளையாட்டில் அசத்தும் தந்தை ஜிகே ரெட்டி! இது மிகப்பெரிய சாதனை.. விஷால் பகிர்ந்த புகைப்படம்
Vishal: 82 வயதிலும் விளையாட்டில் அசத்தும் தந்தை ஜிகே ரெட்டி! இது மிகப்பெரிய சாதனை.. விஷால் பகிர்ந்த புகைப்படம்
பிரபல நடிகர் விஷாலின் (Vishal father gk reddy) தந்தை தன்னுடைய 82 வயதிலும், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்து வருவதை நினைத்து பெருமை படுவதாக ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார் விஷால்.

தமிழ் திரையுலகின், அதிரடி ஆக்ஷன் ஹீரோக்களின் ஒருவராக இருப்பவர் விஷால், இவர் தந்தை ஜி.கே.ரெட்டி பல படங்களை தயாரித்துள்ளவர். 82 வயதாகும் இவர் எப்போதும் தன்னுடைய ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துபவர்.
தமிழ் திரையுலகின், அதிரடி ஆக்ஷன் ஹீரோக்களின் ஒருவராக இருப்பவர் விஷால், இவர் தந்தை ஜி.கே.ரெட்டி பல படங்களை தயாரித்துள்ளவர். 82 வயதாகும் இவர் எப்போதும் தன்னுடைய ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்துபவர்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள, தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா, ஆரோக்கியமான உணவுகள் எடுத்து கொள்வது மட்டும் இன்றி, அவ்வப்போது... இது குறித்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்று பதக்கங்களையும், பரிசுகளையும் ஜிகே ரெட்டி பெற்றுள்ளார். இதனை மிகவும் பெருமையோடு விஷால் தந்தையின் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்... ’உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றும், உங்களை விட எங்களுக்கு உந்துதல் சக்தி உடைய நபர் வேறு கிடையாது... இந்த வயதிலும் நீங்கள் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பதக்கங்களையும் வாங்குவது மிகப்பெரிய சாதனை. உங்களை நினைத்து எங்களுக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது’ என்றும் தெரிவித்துள்ளார்.
விஷாலின் இந்த பதிவை பார்த்து பலரும், அவரது தந்தைக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 82 வயதிலும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, பதக்கங்களை பெறுவது சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.