மனைவிக்கு காதலுடன் வாழ்த்து சொன்ன விராட் கோலி..மகளுக்காக சொந்த தொழிலை விட்ட அனுஷ்கா..
பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Anushka sharma
அனுஷ்கா நடிகையுடன் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். 2012 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் முதல் 100 இடங்களுக்குள் அனுஷ்காவும் இடம் பெற்றார். மேலும் 2018 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் ஆசியாவின் முதல் 30 இடங்களிலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டது.
Anushka sharma
அனுஷ்கா சர்மா உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தார். இவரது தந்தை கர்னல் அஜய் குமார் சர்மா ராணுவத்தில் அதிகாரி. அனுஷ்காவின் சகோதரர் கர்ணேஷ் சர்மாவும் ஒரு திரைப்பட தயாரிப்பாளர்.
Anushka sharma
அனுஷ்கா தனது திரையுலக வாழ்க்கையில் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். திரையுலகிற்கு அறிமுகம் ஆகும் போதே யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோவுடன் 'ரப் நே பனா தி ஜோடி', 'பத்மாஷ் கபன்னி' மற்றும் 'பேண்ட் பாஜா பாராத்' ஆகிய 3 படங்கள் ஒப்பந்தமானார் அனுஷ்கா சர்மா.
Anushka sharma
பிரபல நாயகியாக வலம் வந்த அனுஷ்கா கடந்த 2013-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை சந்தித்தார். இருவரும் ஒரு ஷாம்பு விளம்பரத்தில் இணைந்து பணியாற்றின. பின்னர் காதல் வசப்பட்ட இருவரும் சில வருடங்கள் டேட்டிங் செய்தனர்.
Anushka sharma
பின்னர் இத்தாலியில் பிரமாண்ட திருமண ஏற்பாட்டில் இருவரும் கனவுலகம் போன்ற வியக்கவைக்கும் முறையில் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் வாமிகா என்ற மகள் உள்ளார்.
Anushka sharma
பின்னர் 2015 ஆம் ஆண்டில், அனுஷ்கா தனது சகோதரர் கர்னேஷ் சர்மாவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் பேனரில் NH 10, Phillauri, Pari போன்ற படங்களை தயாரித்துள்ளார்.
Anushka sharma
ஆனால் சமீபத்தில் தாயானா அனுஷ்காசர்மா தனது மகளை வளர்ப்பதற்காக இந்த தயாரிப்பு நிறுவனத்தை விட்டு வெளியேறினார் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Anushka sharma
இன்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அனுஷ்காவுக்கு அவரது கணவர் விராட் கோலி பகிர்ந்துள்ள பிறந்த நாள் வாழ்த்தில் "நீ பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி. நீ இல்லாமல் நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. நீ வெளியே உண்மையிலேயே அழகாக இருக்கிறீர்கள் " என்று எழுதியுள்ளார் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.