- Home
- Cinema
- சொன்னதை செய்யாத 'கேப்டன் மில்லர்' படக்குழு..! தனுஷ் படமா இருந்தாலும் வேண்டாம்... வெளியேறிய வில்லன் நடிகர்!
சொன்னதை செய்யாத 'கேப்டன் மில்லர்' படக்குழு..! தனுஷ் படமா இருந்தாலும் வேண்டாம்... வெளியேறிய வில்லன் நடிகர்!
நடிகர் தனுஷ் நடித்து வரும், 'கேப்டன் மில்லர்' படத்தில் இருந்து அதிரடியாக வில்லன் நடிகர் ஒருவர் விலகி உள்ளதாக வெளியாகி உள்ள தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Dhanush
நடிகர் தனுஷ் இதுவரை நடித்த படங்களில் இருந்து மிகவும் மாறுபட்ட கதைகளத்திலும், கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்துவரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இந்த படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
மூன்று பாகங்களாக இப்படம் வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், விரைவில் இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் கார்த்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் தனுஷ் 3 பாகங்களிலும், மாறுபட்ட கெட்டப்பில் வருவார் எனக் கூறப்படுகிறது. சுதந்திரம் வாங்கும் காலகட்டத்திற்கு முன்பு, அதாவது 1940களில் முதல் பாகம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது பாகம் 1990 காலகட்டங்களில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது பாகம் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றது போல் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆற்றில் முக்காடோடு கவர்ச்சி குளியல் போடும் திவ்யா துரைசாமி! இளசுகளை ஏங்க வைத்த ஹாட் போட்டோ ஷூட்!
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். முக்கிய கீ ரோலில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடித்துள்ளார். அதே போல் சந்திப் கிஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும், இந்த படத்தில் பிரபல வில்லன் நடிகர் டானியல் பாலாஜி நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்த நிலையில், அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள், கால்ஷீட் கொடுத்த நாட்களில் சொன்னபடி எடுத்து முடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து டேனியல் பாலாஜி அடுத்தடுத்த படங்களில் தற்போது நடித்து வருவதால், தனுஷின் படத்திற்கு மீண்டும் கால்ஷீட் கொடுக்க முடியாது என கூறி, இந்த படத்தில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 'கேப்டன் மில்லர்' படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 30-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் டானியல் பாலாஜிக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை வில்லனாக நடிக்க வைக்க, படக்குழு தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.