மகனின் ஆசைக்கு போனஸை மட்டுமே நம்பியிருக்கும் அப்பா – விக்ராந்தின் தீபாவளி போனஸ் எப்படி?
Deepavali Bonus Movie Story : விக்ராந்த் மற்றும் ரித்விகா நடிப்பில் வெளியான தீபாவளி போனஸ் படம் எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
Deepavali Bonus Movie Story
Deepavali Bonus Movie Story : இயக்குநர் ஜெயபால் ஜெ இயக்கத்தில் போனஸ் ஒன்றை மட்டுமே வைத்து வெளியான படம் தீபாவளி போனஸ். இந்தப் படத்தில் விக்ராந்த், ரித்விகா பன்னீர்செல்வம் முன்னணி ரோலில் நடித்திருந்தனர். கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 1 மணி 34 நிமிடம் தான். அவ்வளவு சிம்பிளாக சொல்ல வேண்டிய விஷயத்தை எந்தவித குறையும் இல்லாமல் கச்சிதமாக சொல்லிவிட்டார்.
Deepavali Bonus
அன்றாடம் கஷ்டப்படும் மிடில் கிளாஸ் வாழ்க்கையை இந்தப் படம் பிரதிபலிக்கிறது. இதுவே பண்டிகை, ஃபங்கஷன் என்றால் அவர்கள் படும் கஷ்டம் எப்படி இருக்கும் என்பதை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். படத்தில் ஒரு சில பாடல்கள் தான். சிறிய வீடு, டிவிஎஸ் எக்ஸ்எல், ஹெல்மெட், தீபாவளி இது தான் படத்தின் முக்கிய அம்சங்கள்.
நாக சைதன்யா சோபிதா துலிபாலா திருமணத்துக்கு பைக், கார், தங்கம், வீடுன்னு குவியும் பரிசுகள்!
Deepavali Bonus OTT Release
தீபாவளி பண்டிகையின் போது ரூ.2000 கூட இல்லாமல் கஷ்டப்படும் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பெற்றோரின் கதையே தீபாவளி போனஸ். கம்பெனியில் கொடுக்கும் போனஸை வைத்து தான் தன்னுடைய மகனுக்கு அவன் கேட்கும் டிரெஸ்ஸை வாங்கி கொடுக்க வேண்டும். கடைசி வரை கம்பெனியில் போனஸ் போடாமல் இழுத்தடிக்க, தன்னுடைய மகனுக்காக ஹீரோ என்ன வேலை செய்தார், மகனுக்கு தீபாவளி டிரெஸ்ஸை வாங்கி கொடுத்தாரா இல்லையா, கம்பெனியில் போனஸ் போட்டாங்களா இல்லையா என்பது தான் தீபாவளி போன்ஸ் படத்தின் கதை.
Vikranth and Riythvika Starrer Deepavali Bonus
இந்தப் படத்தில் விக்ராந்த் மற்றும் ரித்விகா இருவரும் கச்சிதமாகவே நடித்து தங்களுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். கற்க கசடற படத்தில் ஹீரோவாக அறிமுகமான விக்ராந்த் சரியான கதையும், போதுமான வாய்ப்புகளும் இல்லாமல் சினிமாவில் தடுமாறி வருகிறார். வெண்ணிலா கபடி குழு 2, பக்ரீத், நான் மிருகமாய் மாற, லால் சலாம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு முன்பு வெளியாகியிருந்தாலும் அந்தளவிற்கு ரீச் கொடுக்கவில்லை. எனினும் இப்போது ஓடிடியில் படத்தை கொண்டாட தொடங்கிருக்கின்றனர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் அவர்கள் படும் கஷ்டத்தை இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.