உலக சினிமாவை மிரள வைத்த விக்ரம்.. எத்தனாவது இடம் தெரியுமா?
சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படம் உலகம் முழுவதும் பெரிய சாதனையை படைத்துள்ளது. யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் முதல் பத்து இடங்களுக்குள் பிடித்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

vikram movie
வெளிநாட்டு படங்களின் அளவிற்கு தமிழ் திரைப்படம் ஒன்று மாஸ் காட்டி இருப்பது உலக சினிமாவை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் திரைப்படம் யுஎஸ்ஸில் 465 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளி கிழமை உலகம் முழுவதும் வெளியான இந்த படம் முதல் மூன்று தினங்களில் 1.8 மில்லியன் டாலர்களை வசூலித்து யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் 7 வது இடத்தைப் பிடித்துள்ளது.
Vikram
இது குறித்து வெளியாகியுள்ள யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் பட்டியலில் முதலிடத்தில் 'டாப் கன்' , இரண்டாவது இடத்தில் 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னெஸ்' திரைப்படம் உள்ளது. , மூன்றாவது இடத்தில் 'தி பாப்ஸ் பர்கர்ஸ் மூவி,' நான்காவது 'தி பேட் கைய்ஸ்', ஐந்தாவது 'டவுன்டவுன் அபேய் - தி நியூ எரா', ஆறாவதாக 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' ஏழாவது இடத்தில் உலக நாயகன் கமலின் விக்ரம் பிடித்துள்ளது.
vikram
விஸ்வரூபம் 2 வை தொடர்ந்து நான்கு வருடங்கள் கழித்து வெளியாகியுள்ள உலக நாயகனின் விக்ரமை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையில், கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். மேலும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மேற்கொண்டது.
vikram
பாக்ஸ் ஆஃபீஸிலும் பட்டையை கிளப்பி வரும் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்டோர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த படம் உலக அளவில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளது. உலக அளவில் 167 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தில் டாம் க்ரூஸின் டாப் கன் இரண்டாம் பாகம் , இரண்டாவது இடத்தில் ஜுராஸிக் வேர்ல்ட் டொமினியன் உள்ளது. இந்தப் படம் உலக அளவில் 55 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.