விக்ரம் ஆடியோ லாஞ்ச்..வெளியான சாங் லிஸ்ட்..எத்தனை பாடல்கள் தெரியுமா?
விக்ரம் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் லாஞ்ச் செய்யப்படவுள்ள பாடல்களின் பட்டியலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

vikram movie
மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தில் கமலுடன் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நரேன், காளிதாஸ் ஜெயராம் பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
vikram movie
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளத இப்படத்தின் படபிபிடிப்பு முடிந்து ப்ரோமோஷன் வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. விக்ரம் படம் வரும் ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
vikram movie
ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிட பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது.. அதன்படி தென்னக ரயில்வே மூலம் விக்ரம் படத்தை விளம்பரப்படுத்தியது ரெட் ஜெயண்ட். இந்நிலையில் இன்று விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழாசென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
vikram movie
சமீபத்தில் அனிருத் இசையில் 'விக்ரம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் 'பத்தல பத்தல' பாடல் வெளியாகியிருந்தது. இந்த பாடல் பல புகார்களுக்கு ஆளானது. மத்திய அரசு, மற்றும் சாதி குறித்த விமர்சனம் இடம்பெற்றதாக குற்றச்சாட்டப்பட்டிருந்தது. இருந்தும் இந்த பாடல் யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்றது.
vikram movie
இன்று நடைபெறும் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரிலீஸ் செய்யப்பட உள்ள பாடல்களின் லிஸ்ட் வெளியாகவுள்ளது. அதன்படி பாடல்கள் வெளியாகவுள்ளது. பத்தல பத்தல, விக்ரம், வெஸ்டேட், போர் கண்ட சிங்கம், ஒன்ஸ் அப்பனா டைம் உள்ளிட்ட பாடல்கள் வெளியிடப்படவுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.