ரஜினியின் 'அண்ணாத்தே'வை பின்னுக்கு தள்ள ரெடியான விக்ரம்.. பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்!
கடந்த 2021 தீபாவளிக்கு வெளியான ரஜினிகாந்தின் 'அண்ணாத்தே'வை விட சற்று அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் ரூ.40 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

vikram movie
கமல்ஹாசன், படத்தில் பாசமிகு தந்தையாக நடித்திருக்கிறார். மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது சிங்கமாக கர்ஜித்து நடிப்பில் நான் தாண்டா டாப் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு சிறப்பான கம்பேக் படமாக அமைந்துள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் இளம் நடிகர்களைப் போல் அசால்டாக நடித்து அப்ளாஸ் வாங்கியுள்ளார். இதைப்பார்க்கும் போது ஆண்டவரே வேறலெவல் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
vikram movie
கமல் மகன் கொலை குற்றவாளிகளை கண்டறியும் சீகரெட் ஏஜென்டாக பகத் பாசில், போதைப்பொருள் கடத்தல் மன்னாக வரும் விஜய் சேதுபதி, சூர்யா கடைசி 5 நிமிடங்கள் வந்தாலும், மனதில் நிற்கும்படியான ஒரு கேரக்டரில் நடித்து மிரட்டி இருக்கிறார். கிளைமேக்சிலும் அனல் பறக்கும் விதத்தில் கைதி 1, விக்ரம் 3 அப்டேட்டுகளை கொடுத்து ரசிகர்களுக்கு சரியான தீனி போட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
vikram movie
ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் ஆட்சி செய்து வருகிறது. ஆக்ஷன் த்ரில்லர் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது விக்ரம். மேலும் காலை மற்றும் பிற்பகல் காட்சிகளுடன், மாலை மற்றும் இரவு காட்சிகளின் 90% க்கும் அதிகமான திரைகளில் ஹவுஸ்ஃபுல் போர்ட் வைக்கப்பட்டு விட்டது. கமல்ஹாசன் இப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை ருசிப்பார், அதே நேரத்தில் படத்தின் முதல் நாள் வசூல் சுமார் ரூ 29 முதல் 30 கோடி வரை தமிழ்நாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
vikram movie
இது 2021 தீபாவளிக்கு வெளியாகும் ரஜினிகாந்தின் 'அண்ணாத்தே'வை விட சற்று அதிகமாக இருக்கும். வர்த்தக ஆய்வாளர்களின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் ரூ.40 கோடிக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'விக்ரம்' கமல்ஹாசனின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக இருக்கும் என்பது உறுதி, மேலும் பல மொழிகளில் வெளியாவது ஒரு பெரிய வசூலை எளிதில் அடைய உதவும்.